ஆந்திராவில் பயங்கரம் லாரி மீது லோடு வேன் மோதி 7 பேர் பரிதாப பலி

திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரந்தசிந்தலாவில் உள்ள வட்டரபாவி கிராமத்தை சேர்ந்த 38 பேர் ஸ்ரீசைலம் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு நேற்று முன்தினம் மாலை லோடு வேனில் சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, நள்ளிரவு 11.50 மணியளவில் திரும்பி கொண்டிருந்தபோது, வட்டரபாவி கிராமம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பக்தர்கள் வேன் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் நாராயண கோட்டம்மா(65), கோட்டம்மா(70), புலிபாடு கோட்டேஸ்வரம்மா(55), மக்கென வெங்கடரமணா(40), லட்சுமிநாராயணா(35), குருசெட்டி … Read more

கோயில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

திருவள்ளூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (40). இவர் மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கோயில் அருகில் உள்ள குளத்தில் கால் கழுவதற்கு சென்றபோது கால்வழுக்கி குளத்தில் விழுந்ததில் சேற்றில் சிக்கிய அங்குள்ள தாமரைச் செடி கொடிகள் இடையே சிக்கி தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற யாரும் வராததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகம் உள்பட 24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்: விற்பனையாளர்கள் சங்கம் இன்று ஒருநாள் போராட்டம்

புதுடெல்லி: `தமிழகம் உள்ளிட்ட 24 மாநிலங்களை சேர்ந்த 70,000 பெட்ரோல் பங்குகள், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை,’ என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் அனுராக் நாராயண் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பால் சில்லரை விற்பனை விலையை உடனே மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் சில்லரை விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை எண்ணெய் … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,041.08 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,041.08 புள்ளிகள் உயர்ந்து 55,925.74 புள்ளிகளில் வணிகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 308.95 புள்ளிகள் உயர்ந்து 16,661 புள்ளிகளில் வணிகம் முடிந்தது.

மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முயன்ற பலாத்கார குற்றவாளி மீது துப்பாக்கி சூடு: அசாமில் ஓராண்டில் 47 பேர் என்கவுன்டரில் பலி

கவுகாத்தி: அசாமில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலியல் குற்றவாளி, அங்கிருந்து தப்ப முயன்ற போது போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இம்மாநிலத்தில் கடந்த ஓராண்டில் போலீஸ் என்கவுன்டரில் 47 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவ சிகிச்சைக்காக திபு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் இரவு முதல் மருத்துவமனையில் … Read more

+2 வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்கம்

சென்னை: +2 வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மோடியின் 2.0 இன்றுடன் 3 ஆண்டு நிறைவு: நாளை சிம்லாவில் பாஜக சிறப்பு மாநாடு

சிம்லா: பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிகாலத்தின் 3வது ஆண்டு இன்றுடன் நிறைவுற்ற நிலையில், நாளை சிம்லாவில் பாஜகவின் சிறப்பு மாநாடு நடக்கிறது. குஜராத் முதல்வராக இருந்த மோடியின் தலைமையில் கடந்த 2014ம் ஆண்டு  நடந்த நாடாளுமன்ற தேர்தலை பாஜக எதிர்கொண்டது. பெரும்பான்மை பலத்துடன் பாஜக  வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். அதற்கடுத்து 2019ல் நடந்த தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, 353 இடங்களை  கைப்பற்றியது. பாஜக மட்டும் 303 இடங்களை வென்றது. கடந்த … Read more

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கோட்டயம் வழியாக இரட்டை ரயில் பாதையில் போக்குவரத்து தொடக்கம்: 100 சதவீதம் மின்மயமாக்க சாதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் கோட்டயம் வழியாக இரட்டை ரயில் பாதையில் நேற்றிரவு முதல் போக்குவரத்து தொடங்கியது. இதன்மூலம் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை கொண்ட மாநிலமாக கேரளா மாறியுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக மாநில எல்லை வரை சுமார் 600 கி.மீ தூர ரயில் பாதை உள்ளது. இந்த பாதையில் மின்சார இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் பெரும்பாலான இரட்டை பாதை பணிகள் முடிவடைந்தன.இந்த … Read more

ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.8 லட்சம் பறிமுதல்

கோவை: கோவை பச்சாபாளையத்தில் ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனியர் பேக்டரி உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ.8 லட்சத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.