ஆதார் நகலை எங்கும் கொடுக்க வேண்டாம்: ஒன்றிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி: ஆதார் நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் நகலை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. தவிர்க்க முடியாத பட்சத்தில் பொது மையங்களில் ஆதாரை பதிவிறக்கம் செய்த பின் குறிப்பிட்ட கோப்பையை அழிப்பது அவசியம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.  

செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கல்லூரியில் நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்திற்கு கடத்தப்பட இருந்த 1.9 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

கொழும்பு: இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 1.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமன்னார் பகுதி வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்த உள்ளதாக இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் பேரில் இலங்கை கடற்படை நடத்திய சோதனையில் நடுக்கடலில் 3 பேர் கைது செயற்பட்டனர்.

நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்

நேபாளம்: நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. பொகாராவில் இருந்து ஜோம்சாம் சென்ற விமானம் காலை 9.55 மணியளவில் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்!

சென்னை: பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பா.ம.க.வின் கவுரவ தலைவராக தேர்வான ஜி.கே.மணியும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

எல்.முருகனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: ஒன்றிய இணை இயக்குனர் எல்.முருகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தங்களின் அர்ப்பணிப்பு இளைஞர்களை ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். நல்ல உடல்நத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என எல்.முருகனுக்கு பிரதமர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது: 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதாளரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,828 பேருக்கு கொரோனா.. 14 பேர் பலி…. 2035 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,828 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,53,043 ஆக உயர்ந்தது.* புதிதாக 14 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

நைஜீரியாவில் தேவாலய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

நைஜீரியா: நைஜீரியாவில் தேவாலய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். போர்ட் ஹார்கோர்ட் நகரில் நடந்த தேவாலய நிகழ்ச்சியில் உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலினால் 31 பேர் பலியாகினர்.