கேரள அரசின் பம்பர் லாட்டரியில் 10 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி யார்?: 6 நாட்கள் ஆகியும் தெரியவில்லை

திருவனந்தபுரம்: கேரள அரசின் விஷு பம்பர் லாட்டரி  டிக்கெட் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. முதல் பரிசு ₹10 கோடி என்பதால்  டிக்கெட் வெளியான உடனேயே பரபரப்பாக விற்பனையானது. மொத்தம் 43.86 லட்சம்  டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இதில், 43,69,202 டிக்ெகட்டுகள்  விற்பனையானது. இதன் மூலம், கேரள அரசுக்கு ₹93 கோடிக்கு மேல் வருமானம்  கிடைத்தது. இந்நிலையில், லாட்டரி குலுக்கல்  கடந்த 22ம் தேதி   திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில், முதல் பரிசான ₹10 கோடி HB 727990 என்ற  … Read more

மே-28: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை: சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு

புதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான இவர்,  கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004 வரை அரியானா மாநில முதல்வராக பதவி வகித்தார். அப்போது, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.10 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,309,334 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.09  லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,309,334 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 530,775,391 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 501,287,559 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,684 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூனில் மின்னணு ஏலம்: தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16,17ம் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16, 17ம் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு … Read more

இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது

புதுடெல்லி: இந்திய பெண் எழுத்தாளர் கீதாஞ்சலி க்கு, ‘சர்வதேச புக்கர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண் எழுத்தாளர் இந்த விருதை பெறுவது இதுவே முதல்முறை.உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில் வெளியான நூல்கள், நாவல்கள், புதினங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இவற்றில் ஆண்டுதோறும் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக  அதற்கு சர்்வதேச புக்கர் விருது அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை  லண்டனில் 5  நீதிபதிகள் கொண்ட … Read more

ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்

ஸ்ரீநகர்: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததில் 7 வீரர்கள் பலியாகினர்.ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் ராணு வீரர்கள், அடிக்கடி முகாம்கள் மாற்றப்படுவது வழக்கம். இதன் காரணமாக, ஒரு முகாமில் இருந்து மற்றொரு  முகாமுக்கு வாகனங்களில் அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.இதுபோல், லடாக்கில் உள்ள பர்தாபுர் என்ற இடத்தில் இருந்து ஹனிப் என்ற இடத்தில் உள்ள எல்லை முகாமுக்கு நேற்று காலை 26 வீரர்கள் ராணுவ வாகனத்தில் … Read more

அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முந்தைய ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் ஏழைகள், நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர்’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.டெல்லியில், ‘பாரத் டிரோன் மகோத்சவ்’ என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய டிரோன் திருவிழா நேற்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:முந்தைய அரசாங்கங்கள், தொழில்நுட்பத்தை பிரச்னையின் ஒரு பகுதியாக பார்த்தன. இதை ஏழைகளுக்கு எதிரானவை என முத்திரை குத்த முயற்சிகள் செய்தன. இதன் காரணமாக, 2014ம் … Read more

பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு

புதுடெல்லி: உத்தரகாண்ட்டில் தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருமகள் புகார் கொடுத்ததால் அவமானம் அடைந்த முன்னாள் அமைச்சர். வீட்டின் குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று, பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். கடந்த 2004 – 2005ம் ஆண்டில் என்.டி.திவாரி இங்கு முதல்வராக இருந்தபோது, அமைச்சர் பதவி வகித்தார். ஹல்ட்வானியில் உள்ள தனது வீட்டில் மகன் … Read more

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு பரூக் அப்துல்லா ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாக, அவர் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவுக்கு சொந்தமான ரூ.11.86 கோடி சொத்துக்கள் கடந்த 2020ம் ஆண்டில் முடக்கப்பட்டன. வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை பலமுறை பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தி உள்ளது. இந்நிலையில், … Read more