தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியில் வேலையின்மை அதிகரிப்பு: காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தெரிவித்தது. பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி குறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து ஆவணம் வெளியிட்டது.

அமெரிக்க அரசுக்கு ரூ.1160 கோடி அபராதம் செலுத்த டிவிட்டர் நிறுவனம் சம்மதம்..!!

வாஷிங்டன்: அமெரிக்க அரசுக்கு ரூ.1160 கோடி அபராதம் செலுத்த டிவிட்டர் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் ரகசியத்தை காக்க தவறியதற்காக டிவிட்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது விளம்பர தகவல்களை அனுப்புவதற்கு, டிவிட்டர் வாடிக்கையாளர் எண்களை தந்ததாக புகார் கூறப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் கார் குளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் கார் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். ரெட்டிவாரி கிராமத்தை சேர்ந்த கங்கிரெட்டி தனது குடும்பத்துடன் திருமணத்துக்கு பலமனேருக்கு காரில் சென்றனர்.மதனப்பள்ளி அருகே புங்கனுரில் கார் வேகமாகச் சென்றபோது சாலையோர கல்வெட்டில் மோதி மொரவப்பள்ளி குளத்தில் கவிழ்ந்தது.காரில் பயணம் செய்த மதுலதா, குஷிதா, தேவன்ஷ் ரெட்டி, கங்கிரெட்டி உள்ளிட்ட 4 பெரும் உயிரிழந்தனர்.தகவல் அறிந்த வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் … Read more

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. சேவூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட கம்பம் நடுவதில் மோதல் ஏற்பட்டது. போலீசார் முன்னிலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

புதுச்சேரி காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டிக்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குளம் காவல் நிலையம் பின்புறம் ரவுடி பொடிமாஸ் என்ற சரத் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உறவினர் வீட்டில் கொலை செய்யப்பட்ட ரவுடி சரத் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. 

கோயம்பேடு காய்கறிகள் விற்பனையகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை

சென்னை  : சென்னை கோயம்பேடு காய்கறிகள் விற்பனையகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது. நேற்றை விட இன்று தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ தக்காளி விலை ரூ.120க்கு  விற்பனையான நிலையில், தற்போது ரூ .80வரை கணிசமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,628 பேருக்கு கொரோனா.. 18 பேர் உயிரிழப்பு.. 2,167 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,628 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,44,820 ஆக உயர்ந்தது.* புதிதாக 18 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!

சென்னை : சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதுவரை 160 பேரை பரிசோதித்ததில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீன நாட்டவருக்கு சட்டவிரோத விசா : சிபிஐ முன்பு இன்று விசாரணைக்கு ஆஜராகினார் கார்த்தி சிதம்பரம்

டெல்லி ; டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் ஆஜராகியுள்ளார். சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த புகாரில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க உள்ளது.