பிரதமர் மோடி இன்று வருகை எதிரொலி; சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

டெல்லி : பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று மாலை 5:45 மணிக்கு சென்னை வருகிறார்.  33 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறார்.மோடியின் வருகையையொட்டி சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அத்துடன் சென்னையில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே-26: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி பிரதீப் மற்றும் கூட்டாளிகள் கைது

சென்னை: சென்னையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி பிரதீப் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதீப், சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகியோரை சேலம் மாவட்டத்தில் தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளனர்.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,305,599 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,300,234 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 529,459,485 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 499,928,761 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,962 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயம் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள 29.5% பங்கும் விற்பனை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள 29.5 சதவீத பங்குகளையும் விற்க ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்த்து வரும் நிலையில், மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் 100 சதவீத பங்கையும் விற்க ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் அரசுக்கு மீதமுள்ள 29.5 சதவீத பங்கையும் விற்பனை செய்ய முடிவு … Read more

காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை: என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி  தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி  பிரிவினைவாத இயக்கத்  தலைவர் யாசின் மாலிக், பரூக் அகமது தர், ஷபீர் ஷா, மசரத் அலாம், முகமது யூசப் ஷா உள்ளிட்ட பலர், தீவிரவாதத்துக்கு நிதி திரட்டி கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். யாசின் மாலிக்  மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீரின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட … Read more

மூத்த தலைவர்களில் ஒருவர்; முன்னாள் ஒன்றிய அமைச்சர் காங்கிரசில் இருந்து கபில் சிபல் விலகல்: சமாஜ்வாடி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் போட்டி

லக்னோ: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கபில் சிபல், காங்கிரசில் இருந்து நேற்று அதிரடியாக விலகினார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோற்றதில் இருந்தே காங்கிரசில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. 2019 மக்களவை தேர்தலில் தோற்றப் பிறகும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியை சந்தித்தப் பிறகும் உட்கட்சி பூசல், தலைவர்கள் விலகல் போன்றவை அதிகமாகி இருக்கின்றன. குறிப்பாக, நேரு குடும்பத்தை சாராத ஒருவரை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கும்படி, குலாம் நபி … Read more

செங்கல்பட்டில் திடீர் கனமழை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சிங்கப்பெருமாள் கோயில், ஆப்பூர், ஆலப்பாக்கம், வல்லம், கொண்டமங்களம், அனுமந்தபுரம், பொன்விளைந்த களத்தூர், செட்டிபுண்ணியம், வீராபுரம் உள்பட பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கடுமையான வெயில் வாட்டியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வெப்பம் அதிகரித்து இருந்தது. மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், குளிர்ச்சியான காற்று வீசியது. சிறிது நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த சூறைக்காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு … Read more

சீனா பாஸ்போர்ட் விவகாரத்தில் இன்று ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்: ஓரிரு நாளில் கைதாக வாய்ப்பு

புதுடெல்லி: சீனா நாட்டினருக்கு பாஸ்போர்ட் வாங்கி தருவது தொடர்பாக ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரை, பஞ்சாப்பை சேர்ந்த தொழிற்சாலைக்காக சட்டவிரோதமாக சீனாவை சேர்ந்த 263 தொழிலாளர்களை அழைத்து வர விசா பெற்றுத் தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் மீது … Read more

பைக் மீது லாரி மோதி மனைவி பரிதாப பலி

புழல்:  புழல் கண்ணப்பசாமி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார். கேட்டரிங் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூஜா(30), மதனாங்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். பூஜா நேற்று மாலை பணி முடித்துவிட்டு தனது கணவருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, புழல் காவல் நிலையம் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது, மாதவரத்திலிருந்து செங்குன்றம் நோக்கி வந்த லாரி பைக்கின் பின்புறத்தில்  வேகமாக  மோதியது. இதில் பூஜா தூக்கிவீசப்பட்டு கணவன் கண்முன் சம்பவ … Read more