பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தப்பியோடிய தாய்: போலீஸ் விசாரணை

ஓசூர்: கடந்த 16 ஆம் தேதி ஓசூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் ஓசூர் கொல்லர் பேட்டையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததோடு மூச்சுவிடுவதில் சிரமப்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மருத்துவமனையின் சார்பில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு வார்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் குழந்தையின் தாயார் ஐஸ்வர்யா கடந்த 22 … Read more

கோவை வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னைஐகோர்ட் வழக்கறிஞர் உயிரிழப்பு

கோவை: கோவை வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளஞ்செழியன் (55)  உயிரிழந்தார். நேற்றிரவு மலையேற்றத்தை தொடங்கிய அவர், 5-வது மலையை ஏறும் போது மயங்கி விழுந்துள்ளார்.

ஊர்விட்டு ஊர்வந்து இளம்பெண்ணை காதலித்த வாலிபருக்கு செருப்பு மாலை

பில்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் கல்வெலியா அடுத்த பஸ்தி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை, பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அந்த வாலிபரை பிடித்து பிணைக்கைதியாக வைத்தனர். பின்னர் அந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து, தங்கள் மகனை அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆனால் அந்த வாலிபரின் குடும்பத்தினர் அங்கு வரவில்லை. அதன்பிறகு அந்த இளைஞனின் தலைமுடியை சிலர் வெட்டினர். பின்னர் முகத்தில் கரியை பூசினர். … Read more

பிரதமர் மோடியின் சென்னை வருகையால் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு: சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையால் நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளை ஈ.வே.ரா.சாலை, சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு, அண்ணா சாலை, எஸ்.வி.படேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் செல்வதை தவிர்த்து, மாற்று வழியில் செல்ல வாகன ஓட்டிகள் திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

அமெரிக்காவில் நடந்த திருமணம் ஆந்திராவில் தியேட்டரில் ஒளிபரப்பு: உறவினர்கள் வாழ்த்து

திருமலை: அமெரிக்காவில் நடந்த திருமணத்தை ஆந்திராவில் உள்ள உலகின் மிகப்பெரிய 3வது சினிமா தியேட்டரில் ஒளிபரப்பப்பட்டது. மணமக்களின் உறவினர்கள் இதை பார்த்து வாழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர்கள் பர்வதா-ஜோதி தம்பதி. இவர்களின் மகன் ரோஹித் (23), அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இவருக்கும் திருப்பதி மாவட்டம் நாயுடுபேட்டையை சேர்ந்த சீனிவாசா-சுனிதா தம்பதியின் மகள் ரிஷிதா (21) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் கடந்த 22ம்தேதி … Read more

சென்னையில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னை திருமங்கலம் வி.ஆர்.மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பார் மேலாளர் பவன், நிகழ்ச்சி பொறுப்பாளர் மார்க், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விக்னேஷ் சின்னதுறை ஆகியோர் கைதாகியுள்ளனர். அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ஒரு காலை இழந்தாலும் குறையாத நம்பிக்கை” – 1 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலால் குதித்து குதித்து செல்லும் சிறுமி..!

பாட்னா: சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலால் குதித்து செல்லும் பீகாரின் ஜமுய் பகுதியை சேர்ந்த சிறுமி சீமா. 10 வயதான இந்த சிறுமி 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் தனது ஒரு காலை இழந்துள்ளார். ஒரு காலை இழந்தாலும் குறையாத நம்பிக்கை கல்வி மீது கொண்ட ஆர்வத்தாலும், தன்நம்பிக்கையாலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ஒரு காலில் குதித்துக் குதித்து தினமும் சென்று வருகிறார். இவரின் இந்த … Read more

திருப்பூர் அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை: பெண் ஒருவர் கைது

திருப்பூர்: அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் சுகாதார ஒப்பந்த பணியாளர் தற்கொலை விவகாரத்தில் பெண் கைது செய்யப்பட்டார். கந்துவட்டி கொடுமையால் சுகாதார ஒப்பந்த பணியாளர் பரிமளா தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. பரிமளா தற்கொலை விவகாரத்தில் தனசேகர் என்பவர் கைதான நிலையில் அவரது தாய் பூவாத்தாள் தற்போது கைது செய்யப்பட்டார். 

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்களை யாசின் தூண்டிவிட்டதாகவும் யாசின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. செங்கல்பட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.