டெல்லியில் மோடியுடன் சந்திப்பு இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

புதுடெல்லி: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர், இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹3.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இந்தியா-ஜப்பான் இடையோன உச்சிமாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா கடந்த அக்டோபரில் பதவியேற்ற பின், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி உச்சி மாநாட்டில் பங்கேற்க, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.அதை … Read more

திருப்பதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தும்புரூ தீர்த்தத்தில் புனித நீராடல்: கொரோனா பாதிப்பு குறைந்ததால் 2 ஆண்டுக்கு பின் அனுமதி

திருமலை: திருப்பதி சேஷாசலம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தும்புரூ தீர்த்தத்தில் 12 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடினர். கொரோனா பாதிப்பு குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி திருமலையில் அடர்ந்த சேஷாசல வனப்பகுதியில் தும்புரூ தீர்த்தமுக்கொடிக்கு ஆண்டுதோறும் பங்குனி மாத பவுர்ணமியன்று தும்புரூ தீர்த்த பாதயாத்திரை நடைபெறும். இதில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து புனித … Read more

சென்னையில் ஏ.பி.வி.பி. அமைப்பின் முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையா கைது..!!

சென்னை: ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டின் வாசலில் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் சுப்பையா கைது செய்யப்பட்டார். அடுக்குமாடு குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையால் மூதாட்டி வீடு வாசலில் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.   

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட  சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. காவல்துறையின் மேல்விசாரணை நடைபெற்று வருவதால் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்தது. மேல்விசாரணை நடத்தப்படும் நிலையில் சாட்சி விசாரணை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என அரசு தரப்பு தெரிவித்தது.   

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: சிறுதானிய சாகுபடி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். விளைபொருட்களின் கொள்முதல் விலைகளை உயர்த்த, கட்டமைப்புகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் தனி விமானம் மூலம் இந்தியா வருகை..!!

டெல்லி: 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். இந்தியா- ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ பிரதமர் மோடியையும் சந்தித்து பேசவுள்ளார்.  

'தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம்': காங். கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வரவேற்பு..!!

சென்னை: தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டிருக்கிறார். வேளாண்மைக்கென மொத்தம் ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு விவசாயிகள் நலன்சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் கே.எஸ். அழகிரி வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு வரை நீட்டிப்பு.!

கொழும்பு: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டது. கொழும்புவில் இன்று நடைபெற்ற ஏசிசி நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது என பிசிசிஐ தெரிவித்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்  உள்பட  24 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த கவுன்சிலின் தலைவராக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் … Read more

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.  

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300க்கான தரிசன டிக்கெட் 21ம்தேதி ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 தரிசனத்துக்கான டிக்கெட் 21-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான டிக்கெட்கள் வருகிற 21ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. இதில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் 21ம் தேதியும், மே மாதத்திற்கான டிக்கெட் 22-ம் தேதியும், ஜூன் மாத டிக்கெட் மார்ச் 23ம் தேதியும் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. … Read more