மாணவர் தூக்கிட்டு தற்கொலை

மங்களூரு: மங்களூருவில் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது சாவிற்கு பேராசிரியர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார். பெங்களூரு குமாரசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் பரத்(20). இவர் மங்களூருவில் விடுதியில் தங்கி ஒட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சகமாணவர்கள் இதுகுறித்து விடுதியின் நிர்வாக அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை … Read more

வரும் 2022-23ம் நிதியாண்டில் வணிகவரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,06,765.22 கோடி வருவாய் கிடைக்கும்: நிதியமைச்சர் நம்பிக்கை

சென்னை: வரும் 2022-23ம் நிதியாண்டில் வணிகவரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,06,765.22 கோடி வருவாய் கிடைக்கும் என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். மாநில எக்சைஸ் வரிகள் வாயிலாக, வரும் நிதியாண்டில் ரூ.10,589.12 கோடி வருமானம் கிடைக்கும். முத்திரைத்தாள், கட்டணம் வாயிலாக வரும் ஆண்டில் அரசுக்கு ரூ.16,322.73 கோடி வருமானம் வரும். மோட்டார் வாகன பதிவு கட்டணம் வாயிலாக வரும் நிதியாண்டில் ரூ.7,149.25 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு கூட்டுத் தலைமையா?.. ஒற்றைத் தலைமையா?.. பரபரப்பு தகவல்கள்

டெல்லி: கட்சிக்கு கூட்டு தலைமை வேண்டும் என வலியுறுத்தி வரும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் 24 மணி நேரத்தில் 2 முறை நடைபெற்றதால் டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இது குறித்து விவாதிப்பதற்காக கூடிய காங்கிரஸ் செயற்குழு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ராஜினாமா செய்ய முன்வந்ததை நிராகரித்தது. இந்நிலையில் ஜி 23 என அழைக்கப்படும் … Read more

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு..!!

சென்னை: முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

சித்தூர் பஜார் தெருவில் உள்ள நகை கடையில் வாங்கியது திருட்டுப்போன சில மணிநேரத்தில் 36 கிராம் நகையை மீட்ட போலீசார்

* சி.சி.டி.வி. கேமராவை வைத்து அதிரடி* உரியவரிடம் உடனடியாக ஒப்படைப்புசித்தூர் : சித்தூர் தொலைந்துபோன 36 கிராம் தங்கத்தை சில மணி நேரங்களில் போலீசார் மீட்டு பாதிக்கப்பட்டவரிடம் கொடுத்தனர். சித்தூரில் நேற்று இரண்டாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் யுகாந்தர் கூறியதாவது: சித்தூர் கொங்க ரெட்டி பள்ளி அடுத்த சத்யா நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் நேற்று காலை சித்தூர் பஜார் தெருவில் உள்ள ஒரு நகைக் கடைக்குச் சென்று இரண்டரை லட்சம் மதிப்பிலான … Read more

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பழனிவேல் தியாகராஜன்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சென்னைக்கு அருகில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் – துறைமுகம் மேம்பாட்டு சாலை திட்டத்தை செயல்படுத்த ரூ.5770 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

திருட்டு வழக்கில் இருவருக்கு காப்பு

குடகு: குடகு மாவட்டம் சோமவாரபேட்டை தாலுகாவில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். குடகு மாவட்டம் சோமவாரபேட்டை தாலுகாவை சேர்ந்தவர் விக்ரம் கடந்த 12-ம் தேதி இவரின் பைக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து அவர் சோமவாரபேட்டை போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சவுட்லு காந்திநகர் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் குமார் … Read more

பெரியாரின் சிந்தனைகள் 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு..!!

சென்னை: பெரியாரின் சிந்தனைகள் 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்ப்பட்டிருக்கிறது. பெரியாரின் கருத்துக்களை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கைதிகளை உறவினர்கள் சந்திக்கலாம்: சிறைத்துறை அனுமதி

சிக்கமகளூரு: கொரோனா தொற்றால் கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ளதால், கைதிகளை உறவினர்கள் சந்திக்க சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சிக்கமகளூரு மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரானா  காரணமாக இந்த கைதிகளை நேரடியாக சந்திப்பதற்கு சிறைச்சாலை துறை அனுமதி மறுத்திருந்தது. இதையடுத்து சந்திக்க வேண்டி வருபவர்கள் அங்கு வந்து அனுமதிபெற்று வீடியோ கால் மூலம் சந்தித்தனர்.இந்நிலையில் தற்போது கொரானா  முற்றிலும் குறைந்து உள்ள … Read more

'முதல்வரின் முகவரி' மூலம் 10 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: ‘முதல்வரின் முகவரி’ மூலம் 10 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். மாநில உரிமைகளின் நலனுக்காக கலைஞர் வழியில் திமுக அரசு தொடர்ந்து செயல்படும். மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் கலைஞர் என்றும் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.