மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: வண்ணங்களின் திருவிழாவான ஹோலி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை பரஸ்பர அன்பு, பாசம், சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழ்கிறது எனவும் கூறினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பாவில் சில நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கினாரா சந்திரபாபு நாயுடு?.. மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு

கொல்கத்தா: பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரித்த நிறுவனம் அதனை ரூ.25 கோடி ரூபாய்க்கு மேற்கு வங்க அரசுக்கு விற்க முயன்றதாக திடுக்கிடும் தகவலை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெகாசஸ் உளவு மென்பொருளை சட்டவிரோதமாக பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டார் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பெகாசஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் மம்தா பானர்ஜி தற்போது புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இஸ்ரேலை சேர்ந்த … Read more

விருதுநகர் அருகே ஆண் குழந்தையை விற்ற தம்பதி உள்பட 6 பேர் கைது

விருதுநகர்: அப்பைநாயக்கன்பட்டியில் ஆண் குழந்தையை விற்ற தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கு 3வதாக பிறந்த ஆண் குழந்தையை ரூ.45,000-க்கு விற்ற அண்ணாமலை- அம்பிகா கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விலைக்கு வாங்கிய சுந்தரலிங்கம் – கோமதியும் கைது செய்யப்பட்டனர்.

தாக்கத்தை குறைத்துக் கொண்டு கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 2,528 பேருக்கு தொற்று உறுதி; 149 பேர் உயிரிழப்பு.!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,528 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,04,005-ஆக உயர்ந்தது.* புதிதாக 149 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

கொடுங்கையூர் அருகே இளைஞரிடம் செல்போன் பறிப்பு – பெண் கைது

கொடுங்கையூர்: பெட்ரோல் இல்லாத இரு சக்கர வாகனத்தை ட்டோ செய்து உதவ வேண்டும் என நடித்து, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்பவரிடம் செல்போன் மற்றும் பைக் பறிக்கப்பட்டுள்ளது. மோனிகா (20) என்ற இளம்பெண் கைது, உடன் வந்த மற்றொரு நபருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.

சீண்டியவரை தாவி கடித்த பாம்பு

பெங்களூரு: சிர்சியில் பாம்புகளை சீண்டியவரை தாவி கடித்த பாம்பு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. மாலத்தில் சிர்சியை சேர்ந்தவர் பாம்பு ஆர்வலர் மாஸ் செய்யது. இவர் ஒரு காட்டுப்பகுதியில் 3 பாம்புகளுக்கு முன் அமர்ந்து தனது கைகளை அசைத்து பாம்புகளை சீண்டிக்கொண்டிருந்தார். அப்போது இவரின் கையின் அசைவுக்கு ஏற்றவாறு பாம்புகளும் வலைந்துக்கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ஒரு பாம்பு தாவி அவரின் மூட்டுப்பகுதியில் கடித்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அதனை இழுக்க முயன்றார்.இருப்பினும் பாம்பு அவரை விடாமல் இருக்கமாக … Read more

மார்ச்-18: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதமாட்டோம்: மாணவிகள் போராட்டம்

சாமராஜநகர்: சாம்ராஜ்நகரில், 10க்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாம்ராஜ்நகர் தாலுகா தி.நகரில் உள்ள கல்லுாரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. தொடர்ந்து, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஹிஜாப்பும் எங்களுக்கு முக்கியம். ஹிஜாப்  அணிய அனுமதிக்காவிட்டால் தேர்வு எழுதமாட்டேன்’ என வலியுறுத்தினார்.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,086,740 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,086,740 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 465,584,289 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 397,553,546 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 63,422 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.