தூத்துக்குடி அருகே கடற்கரையில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி கீழவைப்பார் கடற்கரையில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கீழவைப்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐஸ் என்ற போதைப்பொருள் படகுடன் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திராவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் மாரடைப்பால் காலமானார்

ஐதராபாத்: ஆந்திராவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் கெளதம் ரெட்டி(50) மாரடைப்பால் காலமானார். ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அமைச்சர் கெளதம் ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்திய கடற்படை கப்பல்களை குடியரசு தலைவர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்!!

டெல்லி : இந்திய கடற்படை கப்பல்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இந்திய கடலோர காவல்படை, இந்திய வர்த்தக கப்பல்கள் உட்பட 60 கப்பல்கள் இதில் பங்கேற்க உள்ளனர். கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விமானங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றன.

ஒன்றிய அரசிடம் கேரளா சிபாரிசு கவர்னரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்

திருவனந்தபுரம்: அரசியலமைப்பு சட்டத்தை மீறுதல், பல்கலைக்கழக வேந்தர் பதவி மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளில் தவறு செய்தால் கவர்னரை நீக்க சட்டசபைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு செய்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி மதன் மோகன் புஞ்சி தலைமையில் ஒரு ஆணையத்தை ஒன்றிய அரசு நியமித்தது. இந்த ஆணையம் ஆய்வு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 59,05,835 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 59,05,835 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 42,47,93,352 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,02,82,600 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,494 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மணிப்பூரில் வேட்பாளரின் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை

இம்பால்: மணிப்பூரில் வேட்பாளரின் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் வரும் 27ம் தேதி, அடுத்த மாதம் 5-ம் தேதி என இரு கட்டங்களாக நடக்கிறது. அந்த மாநிலத்தின் ஆண்ட்ரோ தொகுதியில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராக சஞ்சோய் சிங் என்பவர் போட்டியிடுகிறார். அவர் தனது வீட்டின் நுழைவாயில் அருகே தனது தந்தை மற்றும் ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் தேர்தல் தொடர்பாக ஆலோசித்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு … Read more

உடல் ஒன்று; வாக்கு இரண்டு: பஞ்சாப் தேர்தலில் வாக்களித்த இரட்டையர்கள்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மணவாலாவில் உள்ள வாக்குச்சாவடி எண் 101ல் இரட்டையர்களான சோஹ்னா மற்றும் மோஹ்னா வாக்களித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 2.14 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து செல்கின்றனர். இந்நிலையில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வாக்களித்த … Read more

கேரள காவல்துறையில் உயரதிகாரிகளின் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண் போலீசார்: முன்னாள் பெண் டிஜிபி ஸ்ரீலேகா வேதனை

திருவனந்தபுரம்: கேரள காவல்துறையில் பெண் போலீசார், உயரதிகாரிகளின் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் என்று, ஓய்வுபெற்ற பெண் டிஜிபி ஸ்ரீலேகா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள காவல்துறையில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்று பெயர் பெற்றவர் ஸ்ரீலேகா. குற்றப்பிரிவு ஐஜி, போலீஸ் பட்டாலியன் ஏடிஜிபி, சிறைதுறை டிஜிபி உள்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். 4 வரும் சிபிஐ-யில் எஸ்பியாகவும் இருந்துள்ளார். கடந்த 2020ல் தீயணைப்புத்துறை டிஜிபியாக இருந்தபோது ஓய்வு பெற்றார்.இந்த நிலையில் முன்னாள் பெண் … Read more

இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதி

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறியுடன் ராணி எலிசபெத்திற்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக அரண்மனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

குடிபோதையில் போலீசாரிடம் ரகளை செய்த நடிகை கைது

மும்பை: குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகை காவ்யா தாபர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த பிரபல நடிகை காவ்யா தாபர். மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மார்க்கெட் ராஜா என்ற படத்திலும், இந்தியில் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே காரில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி … Read more