பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி மின்வாரிய உயர் அதிகாரி படுகாயம்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம்,  செய்யாறு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அருள்மொழி(54). இவர் நேற்று சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அருள்மொழி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து பெண் போலீசின் பல்லை உடைத்த தமிழ் நடிகை காவ்யா தாப்பர் கைது

மும்பை:மும்பையை சேர்ந்த நடிகை காவ்யா தாப்பர் (26), தமிழ், இந்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற தமிழ் படத்தில் வாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நேற்று அதிகாலை 1 மணிக்கு நடிகை காவ்யா ஜூகுவில் மது அருந்திவிட்டு காரை ஓட்டிச் சென்றார். ஜே.டபிள்யூ மாரியாட் ஓட்டல் அருகில் வரும் போது இவரது கார் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய கார், சாலை ஓரம் … Read more

நாகையில் இருந்து விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை: நாகையில் இருந்து விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்த முயன்ற நாகையை சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாரத்தில் இறங்கிய முலாயம்சிங்

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசார களத்தில் முலாயம் சிங், நேற்று தனது மகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 403 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளன. … Read more

2-வது டி20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

கொல்கத்தா: 2-வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக  இந்திய அணி நிர்ணயித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக விராட் கோலி 52 ரன்களும், ரிஷப் பந்த் 52 ரன்களும், வெட்கடேஷ் 33 ரன்களையும் குவித்தனர்.

சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோயிலில் பிரபல நடிகை நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சோட்டாணிக்கரை பகவதியம்மன கோயிலும் ஒன்று. இங்கு மாசி மாதம் மகம் நாளில் சிறப்பு பூதைஜகள் நடைபெறுவது வழக்கம். இதில் கேரளாஉள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள். நேற்று மகம் நாள் என்பதால் ஏராளமான பெண்கள் கோயிலில் தரிசனம் செய்ய குவிந்தனர். இதில் பிரபல நடிகை நயன்தாரா, தனது காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் … Read more

உள்ளாட்சித் தேர்தல்: கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலையொட்டி கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளராக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மோகன்ராஜாவுடன் 3வது முறையாக இணைந்த நயன்தாரா

மோகன்ராஜாவுடன் 3வது முறையாக இணைந்த நயன்தாரா 2/18/2022 5:18:05 PM மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன்’மற்றும் வேலைக்காரன் படங்களில் நடித்த நயன்தாரா தற்போது அவர் இயக்கும் தெலுங்கு படமான காட்பாதர் படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் இது. தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மோகன்லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சுவாரியர் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். சில மாதங்களாக அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் … Read more

பாஜ குறித்து மன்மோகன் சிங் பேச்சு நிர்மலா சீதாராமன் பதிலடி

புதுடெல்லி: கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் அந்த மாநிலங்களில் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பேசும்போது, ‘பிரிட்டிஷ் கொள்கையின் அடிப்படையில் போலி தேசியவாதியை பாஜ நம்புகிறது. இந்தியாவில் பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆகி கொண்டே இருக்கிறார்கள், ஏழைகள் ஏழைகளாக ஆகி கொண்டே இருக்கிறார்கள். … Read more

துணை ராணுவப்படை பாதுகாப்புக்கு உத்தரவிட அதிமுக விடுத்த கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

சென்னை: துணை ராணுவப்படை பாதுகாப்புக்கு உத்தரவிட அதிமுக விடுத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.