கடைசி விவசாயியை கொண்டாட வேண்டும்: மிஷ்கின்

கடைசி விவசாயியை கொண்டாட வேண்டும்: மிஷ்கின் 2/18/2022 5:28:32 PM காக்கமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன். தற்போது கடைசி விவசாயி படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் சமீபத்தில் தியேட்டரில் வெளிவந்தது. படத்தை பற்றி பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். அதில் கடைசி விவசாயி படத்தை நாம் கொண்டாட வேண்டும் என்று  என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படமென்று கடைசி … Read more

நதிகள் இணைப்புத்திட்டத்தை ஒன்றிய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசு வேண்டுகோள்

டெல்லி: நதிகள் இணைப்புத்திட்டத்தை ஒன்றிய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கோதாவரி கிருஷ்ணா, காவேரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு அளிக்கும் என தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வலியுறுத்தியுள்ளார்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 59 புள்ளிகள் குறைந்து 57,833 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 59 புள்ளிகள் குறைந்து 57,833 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 28 புள்ளிகள் குறைந்து 17,276 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

ரஹ்மானின் வெளியாகாத பாடல்

ரஹ்மானின் வெளியாகாத பாடல் 2/18/2022 2:54:10 PM ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை வெளிவராத படத்தின் பாடல் ஒன்றின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான்,  விக்ரம் நடித்துவரும் கோப்ரா, மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் மற்றும் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் இரவின் நிழல் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடலொன்றை … Read more

கர்நாடகாவில் கல்லூரி ஆசிரியர்கள் ஹிஜாப் அணிய தடை: வேலையை ராஜினாமா செய்த பெண் விரிவுரையாளர்

கர்நாடகா: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்தக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியதால் கர்நாடகாவில் விரிவுரையாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். துமகூரு நகரில் உள்ள ஜெயின் பியூ கல்லூரியில் ஆங்கில பாடப்பிரிவு விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர் சாந்தினி. கடந்த 3 வருடங்களாக இவர் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விரிவுரையாளர் சாந்தினி, தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், … Read more

முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே முச்சதம் விளாசி பீகார் வீரர் சகிப்புல் கனி சாதனை

முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே முச்சதம் விளாசி பீகார் வீரர் சகிப்புல் கனி சாதனை படைத்துள்ளார். மிசோரம் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 405 பந்துகளில் 341 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும்!: கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையில் திட்டவட்டம்..!!

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்த்தப்படாது என்றும் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவையின் நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார். அப்போது, கொரோனா காலத்தில் கேரளா அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், அரசின் 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முல்லை பெரியாறு அணையின் … Read more

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21-ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் மீட்பு..!!

டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் ரயில்வே பாதுகாப்பு போலீசால் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்ரேஷன் நான்ஹா ஃபாரஸ்டி என்ற திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 344 சிறுமிகள் உள்பட 1,045 சிறார்கள் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஷின் ஹீவன் ரக்ஷா திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட … Read more

சாமியாரின் ஆசிரமத்தில் மர்மான முறையில் கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கு: சாமியார் முனுசாமி கைது

திருவள்ளூர்: சாமியாரின் ஆசிரமத்தில் மர்மான முறையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சாமியார் முனுசாமியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில் தங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் குடும்பத்தினர் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.