கீரனூர் அருகே சாலையோர மரத்தில் பேருந்து மோதியதில் பயணிகள் 20 பேர் காயம்

புதுக்கோட்டை: கீரனூர் அருகே சாலையோர மரத்தில் பேருந்து மோதியதில் பயணிகள் 20 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த 20 பேர் கீரனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கே 6 என்ற அரசு நகர பேருந்து, ஒடுக்கம்பட்டி அருகே சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

துடியலூரில் போக்சோ வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

கோவை: துடியலூரில் போக்சோ வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆய்வாளர் மீனாம்பிகைக்கு போக்சோ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2020-ல் பதிவான வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் மீனாம்பிகைக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ

அகர்டல: திரிபுரா சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ சிக்கினார். பேரவை நடந்து கொண்டிருந்த போது பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத் ஆபாச படம் பார்த்ததால் பரபரப்பு நிலவியது. விளக்கம் கேட்டு, பாஜக எம்எல்ஏ ஜாதவ் லாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு ஏப்.3 வரை போலீஸ் காவல்

மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு ஏப்.3 வரை போலீஸ் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை ஏப்.3 வரை காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தது மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக காஷ்யப் போலி வீடியோ வெளியிட்டார்.

ஜெயலலிதாவின் சொத்தில் பங்குகேட்டு, அவரது சகோதரர் எனக்கூறி மைசூரைச் சேர்ந்த 83 வயது முதியவர் வழக்கு

சென்னை: ஜெயலலிதாவின் சொத்தில் பங்குகேட்டு, அவரது சகோதரர் எனக்கூறி மைசூரைச் சேர்ந்த 83 வயது முதியவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஐகோர்ட் மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் என்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதாவின் அண்ணன் எனக்கூறி என்.ஜி.வாகதேவன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராமநவமி கொண்டாட்டத்தில் விபரீதம்: இந்தூரில் கோயில் கிணறு இடிந்து விழுந்து 11 பேர் பலி

இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்தனர். ராமநவமி கொண்டாட்டத்தின்போது கிணற்றை மூடியிருந்த தடுப்பு இடிந்து விழுந்தில் 30 பக்தர்கள் சிக்கினர். பலேஸ்வர் மகாதேவ் ஜுலேலால் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்தது. ராமநவமி கொண்டாட்டத்தின் போது அளவுக்கு அதிகமான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் விபரீதம் ஏற்பட்டது.

ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழு கலைப்பு: அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்தது உறுதியானது

திருவண்ணாமலை: அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டது உறுதியானதை அடுத்து ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கொசப்பாளையம் பகுதியில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் இயங்கி வருகின்றது. இதில் 3,500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் நிர்வாக குழுவின் தலைவராக அதிமுக ஒன்றிய அவை தலைவர் சேவூர் சம்பத், துணை தலைவராக சுந்தரமூர்த்தி ஆகியோர் இருந்தனர். … Read more

புதுச்சேரியில் கடந்தாண்டு நவம்பர் 30ம் தேதி மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி யானை, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்தாண்டு நவம்பர் 30ம் தேதி மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி யானை, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து புதுச்சேரி வனத்துறை வசம் இருந்த லட்சுமியின் தந்தங்களை, முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டது இந்திய ஹஜ் குழு

டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா செல்லும் புனிதப் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கமாகும்.  இந்த ஆண்டு ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை (சுற்றறிக்கை எண்.6)‘www.hajcommittee.gov.in’ என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. ‘www.hajcommittee.gov.in’ என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தெரிவு … Read more

கரூரில் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு!

கரூர்: கரூரில் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். தவறுதலாக சிறுவன் வாகனத்தின் முன்பு ஓடிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.