தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு: மம்தாவுக்கு எந்தவிதக் கருணையும் காட்டக்கூடாது மும்பை ஐகோர்ட் உத்தரவு..!!

மும்பை: தேசிய கீதத்தை அவமதித்தாக எழுந்த புகாரை கிழமை நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மும்பையில் கஃபே பரேட் மைதானத்திலுள்ள யஷ்வந்த் ராவ் சவாண் அரங்கத்தில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாற்காலியில் அமர்ந்திருந்தார் மம்தா. ஆனால், தேசிய கீதத்தை பாடினார். மேலும் பாடல் முடிவதற்கு முன்னதாக … Read more

ராகுல்காந்தி விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்போராட்டம்; சென்னை சைதாப்பேட்டையில் தள்ளுமுள்ளு

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை சாதாரண உடையில் இருந்த காவலர்கள் தாக்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவர் மயக்கமடைந்தார். இதனை கண்டித்தது காங்கிரஸ் கட்சியினர் 3 மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று, காங்கிரஸ் கட்சியினர் களைந்து சென்றனர். இதேபோல் சேலம் … Read more

வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல்!

ராமேஸ்வரம்: வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு மற்றும் தீவிர குற்றத்தடுப்பு போலீசார் இணைந்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளார்.

அண்ணாமலைக்கு செக்!: தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது.. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  பாஜக – அதிமுக உறவில் விரிசல் என கூறப்பட்ட நிலையில், செய்தியாளர்களுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. அதை மேம்படுத்த உழைத்து வருகிறோம். தொலைதூர கிராமங்களையும், வாக்குச்சாவடிகளையும் பாஜக எட்டியுள்ளது. நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடங்களில் … Read more

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டம்

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கையை ஒதுக்க சபாநாயகரிடம் நேற்று எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், அவையில் இப்பிரச்னையை எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் தப்பி செல்லாத வகையில் நடவடிக்கை: வேலூரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

வேலூர்: ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் தப்பி செல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வேலூரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வயது முதல் 21 வயது வரை குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 42 பேர் தங்கியுள்ளனர். இதில் 6 பேர், கடந்த 27ம் தேதி இரவு பாதுகாவலரை தாக்கிவிட்டு தப்பினர். அவர்களை … Read more

தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் :அமைச்சர் அமித்ஷா

டெல்லி :தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.  அந்த கேள்விக்கு, ‘தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம். அதிமுகவுடனான கூட்டணி தொடரும்’ என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

2 துப்பாக்கிகளுடன் சிக்கிய வழக்கில் திடீர் திருப்பம் நண்பரை சுட்டு தள்ளிய இந்து முன்னணி நிர்வாகி: ஆயுத தடை சட்டத்தில் வழக்கு கட்ட பஞ்சாயத்து, சட்ட விரோத செயல்கள் அம்பலம்

கோவை: துப்பாக்கிகளுடன் பிடிபட்ட இந்து முன்னணி நிர்வாகி நண்பரை சுட்டுவிட்டு நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. அவர் மீது ஆயுத தடை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் துப்பாக்கியை வைத்து கட்ட பஞ்சாயத்து, சட்ட விரோத செயல்களின் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.   கோவை புலியகுளம் மசால் லே அவுட் பகுதியை சேர்ந்தவர்  அயோத்தி ரவி என்கிற ரவிச்சந்திரன் (45). இந்து முன்னணி கோவை மாவட்ட துணை  தலைவர். இவரது வீட்டில் ராமநாதபுரம் போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு ரக … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!!

சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து , ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வருகிறது.

புதுச்சேரியில் இருந்து சென்னை கோவைக்கு விமான சேவை: கவர்னர் தமிழிசை தகவல்

தூத்துக்குடி: புதுச்சேரியில் இருந்து சென்னை, கோவைக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையம் வந்த தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று அளித்த பேட்டி:  காரைக்கால் முதல் இலங்கை வரை கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது. அடுத்தகட்டமாக புதுச்சேரியில் இருந்து கோவை மற்றும் சென்னைக்கு 20 பேர் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமான போக்குவரத்து வர இருக்கிறது. புதுச்சேரியில் … Read more