விருபாக்சப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர கூடாது என கூறி பாஜக தர்ணா போராட்டம்

டெல்லி: பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர கூடாது என கூறி பாஜக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச பெற்ற வழக்கில் நேற்று முன்தினம் பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பா கைது செய்யப்பட்டார். நேற்றிரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விசாரிக்க 5 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் ஆணையிட்டது. 

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!

நெல்லை: நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பல்வீர் சிங். இவர் சிறிய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் வாயில் ஜல்லி கற்களை போட்டு அடித்து பற்களை பிடுங்குவதாக புகார் எழுந்தது. இவரால் பத்திற்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு வருவாய்த்துறையில் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். … Read more

புதுச்சேரியில் கொரோனோவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை: அமைச்சர் தேனீ ஜெயக்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனோவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காரைக்கால் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும். தேசிய அளவில் நட்சத்திர அந்தஸ்து பெற்றதால் பல்கலை. ஆக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

சீமைக்கருவை மரங்களை அகற்றி நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வர ரூ.15,000 மானியம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் சீமைக்கருவை மரங்களை அகற்றி நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வர மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர ஹெக்டேருக்கு ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை..!!

புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்று ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. புலப்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் உடலை சொந்த ஊர் எடுத்துச் செல்ல நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை: பேடிஎம் விளக்கம்

மும்பை: யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என பேடிஎம் விளக்கமளித்துள்ளது. யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. யூபிஐ வாயிலாக 2000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு ஆன்லைன் மூலம் வணிக பரிமாற்றம் செய்தால் வரும் 1ம் தேதி முதல் 1.1% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க தேசிய … Read more

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!

நீலகிரி: கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி மே 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அறிவிக்கப்பட்டது.    நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 6,7 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 12வது காய்கறி கண்காட்சி … Read more

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை

சென்னை: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் சிபிசிஐடி போலீசார் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரம நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள், அவர்களுக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் என்ன? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: மே 10ம் தேதி வாக்குப்பதிவு, மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

டெல்லி: 224 தொகுதிகளை கொண்ட கார்நாடக சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடகா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 13-ல் தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி நிறைவடைகிறது.