ஜூனியர் என்டிஆரின் ஜிம் மேட்டாக மாறிய ஊர்வசி ரவுட்டேலா

பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா ஹிந்தியை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதே சமயம் கடந்த வருடம் தெலுங்கில் இவர் நான்கு படங்களில் நடித்திருந்தாலும் ஆச்சர்யமாக அந்த நான்கிலுமே பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது, தெலுங்கில் உருவாகி வரும் பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் … Read more

ஸ்ரீவள்ளி 2.0 ஆக என்னை பார்ப்பீர்கள் : ராஷ்மிகா நம்பிக்கை

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் புஷ்பா. இதன் முதல் பாகம் புஷ்பா : தி ரைஸ் என்கிற பெயரில் வெளியானது. இரண்டாம் பாகம் தற்போது புஷ்பா : தி ரூல் என்கிற பெயரில் தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக ஸ்ரீ வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். முதல் … Read more

ரீ-ரிலீஸ் ஆகும் ராவணன்

கடந்த 2010ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜஸ்வர்யா ராய், பிரித்விராஜ், பிரபு, பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ராவணன்'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற அளவிற்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனாலும், இன்றளவிலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாக ராவணன் உள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ராவணன் படத்தை நாளை ஏப்ரல் 17ந் தேதி சென்னை, மதுரை, … Read more

ஷங்கர் இல்லத் திருமண விழாவில் சங்கீதா விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கரின் மகளுக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, நயன்தாரா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். நடிகர் விஜய் நேற்றைய நிகழ்வுக்கு வரவில்லை. வெளிநாட்டில் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும், அவருடைய மனைவி சங்கீதா நேற்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ படம் தயாரிக்கும் ராகவா லாரன்ஸ்

நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வரிசையில் மாற்றுத் திறனாளிகளை கொண்டு 'மல்லர் கம்பம்' குழுவை உருவாக்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத் திறனாளி குழுவினர்தான். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், பாடல்களில் டான்ஸில் இவர்களை ஆட வைப்பேன். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். அப்போது தான் 'மல்லர் கம்பம்' என … Read more

மோகனுக்காக 7 முறை மாற்றப்பட்ட கதை

ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகனாக இருந்தவர் மோகன். அதிகமான படங்களில் பாடகராக நடித்ததால் 'மைக் மோகன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற அடம்பிடித்து பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர் தற்போது 'ஹரா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். விஜய்ஸ்ரீ ஜி இயக்கி உள்ளார். யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், … Read more

'அக்கரன்' வில்லங்கமான கதை : எம்.எஸ்.பாஸ்கர்

குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண் கே.பிரசாத் இயக்கி உள்ள படம் அக்கரன். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கதை நாயகனாக நடித்துள்ளார். அவருடன் கபாலி விஸ்வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம் குமார், நமோ நாராயணன், பிரியதர்ஷினி அருணாச்சலம், அன்னராஜ் கார்த்திகேயன், கார்த்திக் சந்திரசேகர், கண்ணன், மஹிமா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் அறிமுக நிகழ்வில் படத்தில் நடித்திருப்பது பற்றி எம்.எஸ்.பாஸ்கர் பேசியதாவது : என் அக்கா மகன் மது என்னிடம் வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் … Read more

'தண்டுபால்யா' பாணியில் உருவாகும் 'தண்டுபாளையம்'

கொடூர கொலை, கொள்ளை கும்பலை மையமாக வைத்து கன்னடத்தில் 'தண்டுபால்யா' என்ற படம் வந்தது. இதில் பூஜா காந்தி நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்தது. தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இதே பாணியில் தமிழில் 'தண்டுபாளையம்' என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. இப்படத்தை டைகர் வெங்கட், கே.டிநாயக் இணைந்து இயக்கியுள்ளனர். வெங்கட் மூவிஸ் சார்பில் தயாரித்துள்ளது. சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், … Read more

ரஜினி 171வது படத்தில் நாகார்ஜுனா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171வது படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன. அப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. அதுபோல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவும் நடிக்கப் போகிறார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாகார்ஜுனா தமிழில் கடைசியாக 2016ல் வெளிவந்த 'தோழா' படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். … Read more

எழுத்தாளரான இயக்குனர்

எழுத்தாளர்கள் இயக்குனராவது அதிகரித்துள்ளது. ராசி அழகப்பன், அஜயன் பாலா, பாஸ்கர் சக்தி போன்று தற்போது சினிமாவுக்கு வந்துள்ள எழுத்தாளர் ராஜ்தேவ். ஏராளமான சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய கிஸ் டெத், ஏ ஸ்டேன்ஜர் இஸ் வாக்கிங் பை என இரண்டு திரைக்கதைகள் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் விருது பெற்றது. தற்போது அவர் இயக்கும் படம் 'சத்தம் இன்றி முத்தம் தா'. இந்த படத்தில் ஸ்ரீகாந்த், விக்னேஷ், பிரியங்கா திம்மேஷ் சந்தியா, ஹரிஷ் பேராடி, … Read more