தேர்தல் இருந்தால் என்ன? – வருகிறது புதிய படங்கள்…!

ஒரு வாரம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து வாராவாரம் புதிய படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த வாரம் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. தேர்தலே வந்தாலும் புதிய படங்கள் வருவதை நிறுத்த வாய்ப்பில்லை என இந்த வாரமும் சில புதிய படங்கள் வெளியாக உள்ளன. ஏப்ரல் 19ம் தேதியன்று பகல் நேரக் காட்சிகள் கண்டிப்பாக நடைபெறாது. மாலை 6 மணிக்கு மேல் வேண்டுமானால் காட்சிகள் நடைபெறலாம். இருந்தாலும் பரவாயில்லை அன்றைய … Read more

'கண்ணப்பா' படத்தில் அக்ஷய்குமார்

முகேஷ்குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவசி, மணிசர்மா இசையமைக்க விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கண்ணப்பா'. சரித்திர கால பக்திப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் பிரபாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள். இப்போது ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் இணைகிறார் என படத்தின் நாயகன் விஷ்ணு மஞ்சு அறிவித்துள்ளார். அக்ஷய்குமார் ஐதராபாத்திற்கு வந்த வீடியோவைப் பதிவிட்டு, “கண்ணப்பா பயணம் இன்னும் உற்சாகமாகிறது. … Read more

புதிய சாதனை படைத்த 'விசில் போடு'

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கும் 'தி கோட்' படத்தின் முதல் சிங்கிளான 'விசில் போடு' பாடல் ஏப்ரல் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. 24 மணி நேரத்தில் இப்பாடல் புதிய சாதனையை யு டியூபில் படைத்துள்ளது. இதுவரை வெளிவந்த பாடல்களில் விஜய் நடித்த 'பீஸ்ட்' படப் பாடலான 'அரபிக்குத்து' பாடல் 24 மணி நேரத்தில் 23.7 … Read more

‛‛சத்தம் பத்தாது விசில்போடு'': விஜய் குரலில் ‛கோட்' பாடல் வெளியீடு

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கோட்'. சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என ஒரு அப்டேட் கொடுத்தார்கள். அடுத்த அப்டேட்டாக இன்று (ஏப்.,14) தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முதல் சிங்கிள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்படி மாலை 6 மணிக்கு முதல் பாடலாக ‛விசில்போடு' பாடல் வெளியானது. இப்பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார், … Read more

நீதிமன்றத்தில் கூட எனது பிரைவசிக்கு பாதுகாப்பு இல்லை ; பாவனா விரக்தி

தமிழில் சித்திரம் பேசுதடி மூலமாக அறிமுகமாகி தீபாவளி, அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னால் படப்பிடிப்பு முடிந்து திரும்பும் போது எதிர்பாராத பலாத்கார நிகழ்வை சந்திக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சில நேரங்களில் திசை மாறி போவது … Read more

விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'… எதற்காக அந்த கெட்டவார்த்தை

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பின் இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‛ரத்னம்'. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சமுத்திரகனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் பாணியில் இந்தப்படம் தயாராகி உள்ளது. வரும் ஏப்., 26ல் படம் திரைக்கு வர உள்ள நிலையில் ரத்னம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலர் முழுக்க முழுக்க விஷாலின் … Read more

திருவள்ளுவரின் வாழ்க்கை சினிமா தொடங்கியது

உலக பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது. இதனை ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டது. அந்த படம் தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்றதோடு, காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது. தற்போது திருவள்ளுவர் பற்றிய படம் தயாராகிறது. இதன் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. படத்திற்கு காமராஜ் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் திரைக்கதையை எழுத, ஏ.ஜே.பாலகிருஷ்ணன் … Read more

பிரபல சினிமா தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ் தற்கொலை

மஹாலட்சுமி லே அவுட் : கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரின் மஹாலட்சுமி லே அவுட்டில் வசித்தவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ், 55. இவர் அப்பு பப்பு, மஸ்த் மஜா மாடி, ஸ்னேஹிதரு, ராம்லீலா உட்பட சில படங்களை தயாரித்தார். அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாக ஓடி வருவாயும் கிடைத்தது. பட தயாரிப்பு மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார். பெங்களூரில், 'ஜெட்லாக்' என்ற பெயரில் … Read more

லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி

தமிழ் புத்தாண்டை ஒட்டி நேற்று ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ், ஹண்டர் என்ற இரண்டு படங்களின் போஸ்டர் வெளியானது. இதில், ஹண்டர் அவரது 25வது படமாகும். லாரன்ஸ் இரண்டு விதமான கெட்டப்பில் நடிக்கும் இந்த படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் லாரன்ஸ் ஜோடியாக ஒரு பாலிவுட் நடிகையும், வில்லனாக ஒரு பாலிவுட் நடிகரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி … Read more

வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால்

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருகிறது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் அளித்த ஒரு பேட்டியில், சமீபத்தில் நடைபெற்ற வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, வரலட்சுமியை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், தமிழை … Read more