பகலில் நோட்டம் விட்டு  இரவில் திருடியோர் கைது | Dinamalar

சஞ்சய் நகர் : பகலில் நோட்டமிட்டு இரவில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பெங்களூரு சஞ்சய் நகர் போலீசார், திருட்டு வழக்கில் ரோகித் மண்டல், 35, வினோத் குமார், 33 ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தை சேர்ந்த இவர்கள் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் திருடி வந்தது தெரியவந்தது.இவர்களிடமிருந்து 79 … Read more

குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

நடிகையும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு சமூக வலைத்தளங்களில் பிசியாக செயல்படக்கூடியவர். சமீபத்தில் அரசியல் பயணமாக டில்லி சென்று விட்டு திரும்பி இருந்தார். இந்த நிலையில் அவர் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவதாகவும் படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். ஆனால் தனக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. அவரது ரசிகர்கள் பதிவின் கீழ் வெளியிட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள குஷ்பு. “லேசான பிரச்சினைதான் திடீரென நடந்து விட்டது. இப்போது நலமாக … Read more

நகராட்சி தலைவர் முனிசாமி விருப்பம்!| Dinamalar

தங்கவயல் : ”எதிர் தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு, பேச்சால் பதில் அளிப்பதை காட்டிலும் நான்கு ஆண்டுகளில் தொகுதியில் நடந்த சாதனைகளை விளக்குவதே சிறந்ததென விரும்புகிறோம்,” என்று நகராட்சி தலைவர் முனிசாமி தெரிவித்தார்.காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம், ராபர்ட்சன்பேட்டை நகராட்சி எதிரில் உள்ள ஸ்டேடியத்தில் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் முனிசாமி, நகராட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின், நகராட்சி தலைவர் முனிசாமி கூறியதாவது:வாதம், விவாதம் தேவையில்லை. … Read more

தனுஷ் என் மகன் : மேலூர் தம்பதிகள் சீராய்வு மனு தாக்கல்

மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நடிகர் தனுஷ் எங்கள் மகன், அவர் எங்களை பராமரிக்க வேண்டும் எனறு பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தனுஷ் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் … Read more

எல்லை தாண்ட தயங்க மாட்டோம்: பயங்கரவாதிகளுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கவுகாத்தி: இந்தியாவை அச்சுறுத்தினால், பயங்கரவாதிகளுக்கு எதிராக எல்லை தாண்டி வந்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் நடந்த விழாவில் ராஜ்நாத் பேசியதாவது: பயங்கரவாதத்தை கடுமையாக கையாளுவோம் என்ற செய்தியை இந்தியா அனுப்பி உள்ளது. வெளியில் இருந்து நாட்டை அச்சுறுத்தினால், எல்லை தாண்ட தயங்க மாட்டோம். … Read more

ஷங்கர் – ராம்சரண் படத்தின் ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம்?

தமிழ்த் திரைப்பட இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சீனியர் ஒளிப்பதிவாளர் திரு பணியாற்றி வந்தார். ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக ரத்தினவேலு பணியாற்றி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அமிர்தசரஸ் நகரில் சமீபத்தில் இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போதிலிருந்து ரத்தினவேலு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுவதாகத் தெரிகிறது. இயக்குனர் ஷங்கருக்கும், திருவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள் என்று ஒரு தகவலும், திரு வேறு … Read more

பெங்களூரில் 11 ஆயிரம் டி.பி., நோயாளிகள் சுகாதார துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்| Dinamalar

காக்ஸ்டவுன் : ‘பெங்களூரில் 11 ஆயிரம் டி.பி., நோயாளிகள் இருக்கின்றனர்’ என்ற அதிர்ச்சி தகவலை சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கர்நாடக சுகாதார துறை சார்பில், மாநிலம் முழுதும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக பெங்களூரு கிழக்கு மண்டலம் சார்பில், காக்ஸ்டவுன் அரசு முதல் நிலை கல்லுாரி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. பெங்களூரு மாநகராட்சி, ஆயுஷ் துறை, ஹோமியோபதி, தேசிய சுகாதார திட்டம், கர்நாடக சுகாதார துறை உட்பட பத்துக்கும் … Read more