இந்தியாவில் மேலும் 2,527 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 2,527 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2527 பேருக்கு கோவிட் உறுதியானது. 1,656 பேர் குணமடைந்துள்ளனர். 33 பேர் உயிரிழந்தனர். தற்போது 15,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 4,26,17,724 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,22,149 ஆகவும் அதிகரித்தது. தற்போது வரை மொத்தம் 187.46 கோடி டோஸ் … Read more

பொட்டு வைக்காத கரீனா : திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். தற்போது ஆமீர்கான் உடன் ‛லால் சிங் சத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து நிறைய விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில் அக் ஷயை திரிதியை முன்னிட்டு அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது. விளம்பரத்தில் கரீனா கபூர் நெற்றியில் பொட்டு வைக்காமல் காணப்படுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கரீனாவின் இந்த செயல் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக … Read more

போலீஸ் மோப்ப நாயை கடித்த திருடன்| Dinamalar

பேர்பீல்டு: அமெரிக்காவில் தன்னை பிடிக்க வந்த போலீஸ் மோப்ப நாயை கடித்துக் குதறிய திருடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேர்பீல்டு நகரில் வசிக்கும் முதியவர் வீட்டில் திருடன் புகுந்து விட்டதாக போலீசுக்கு புகார் வந்தது. உடனே போலீசார் ‘கார்ட்’ என்ற மோப்ப நாயுடன் திருடனை பிடிக்கச் சென்றனர். போலீஸ் நாய் வீட்டிற்குள் நுழைந்த உடன், போதையில் இருந்த திருடன் திடீரென பாய்ந்து நாயின் முகத்தை கடித்தார். அத்துடன் தன் கையில் இருந்த … Read more

சாந்திகிரி மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை முகாம்| Dinamalar

புதுச்சேரி: சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையில் நாளை மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் புதுச்சேரி கிளை எஸ்.வி.,பட்டேல் சாலை பழைய சாராய ஆலை அருகில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் நாளை (24 ம் தேதி) மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடக்கும் ஆலோசனை முகாமில் கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி, ஆர்த்தரைடிஸ், ஸ்பான்டிலேசில் உள்ளிட்ட பல்வேறு … Read more

நடிகர் விமல் ரூ.1.50 கோடி மோசடி : பட வினியோகஸ்தர் போலீசில் புகார்

சென்னை : படம் தயாரிப்பு தொடர்பாக நடிகர் விமல் 1.50 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறி சிங்கார வடிவேலன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கார வடிவேலன், 45; பட வினியோகஸ்தர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: நான், 'மெரினா பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை வினியோகம் செய்து வருகிறேன். நடிகர் விமல், 2016ல் அறிமுகமானார். இவர் நடித்த இஷ்டம், புலி வால், … Read more

சக்ராலயா மோட்டார்ஸ் ஷோரூம் புதுச்சேரியில் முதல்வர் திறப்பு| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரியில் டாடா மோட்டார்ஸ் அங்கீகரிக்கப்பட்ட டீலரான சக்ராலயா மோட்டார்சின், புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், நெய்வேலி மற்றும் காரைக்காலில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக சக்ராலயா மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான முருங்கப்பாக்கத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சக்ராலயா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் துரைராஜ், கோமதி துரைராஜ் தலைமை தாங்கினர். பொதுமேலாளர் ரிஷிடாண்டன், ஏரியா விற்பனை … Read more

நான் வாட்டர் பேபி – ராஷ்மிகா மந்தனா

தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 66வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது புகைப்படம் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் தான் ஜாலியாக நீராடும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, ‛‛நான் வாட்டர் பேபி'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களின் … Read more