பான் இந்தியா படமாகும் 'நாகபந்தம்'

ஆன்மிகம், புராணம் கலந்த சமூக படங்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால் அப்படியான படங்கள் அதிகமாக உருவாகிறது. அந்த வரிசையில் வருகிறது 'நாகபந்தம்'. இந்த படத்தை அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கிறது. 'டெவில்' படத்தை இயக்கிய அபிஷேக் நாமா இந்த படத்தை இயக்குகிறார். கேஜிஎப் புகழ் அவினாஷ் கதை நாயகனாக நடிக்கிறார். சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசை அமைக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் … Read more

அதிரடி பாய்ச்சலில் புதிய சாதனை படைத்த புஷ்பா 2 டீசர்

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அல்லு அர்ஜுனுக்கு ஒரு பான் இந்திய வெற்றியாக இந்த படம் அமைந்தது. சில வெளிநாட்டு அதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தை ரசித்து அவரது மேனரிசத்தை தாங்களும் ரசித்து செய்த வீடியோ வெளியிட்டனர். இதை தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆக-15ல் … Read more

சீதையாக நடிக்க சாய் பல்லவிக்கு 10 கோடி சம்பளம்

பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை மூன்று பாகங்களாக இயக்குகிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ் நடிக்கின்றனர். அனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார். சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரும், சீதையாக நடிக்கும் சாய்பல்லவியும்தான் மூன்று பாகங்களிலும் வருகிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் படத்திற்கு 300 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மூன்று பாகத்திற்கும் சேர்த்து … Read more

இறுதி கட்டத்தில் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்'

கார்த்தி நடித்த 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர் தயாள் தற்போது இயக்கி வரும் படம் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்'. குழந்தைகளை மையமாக வைத்து இதுவரை பேண்டசி படங்கள், கார்டூன் மற்றும் அனிமேஷன் படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக குழந்தைகளை வைத்து அரசியல் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் யோகி பாபுவும், செந்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர இமயவர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா, பவஸ் ஆகிய 4 சிறுவர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். … Read more

தயாரிப்பாளர் கில்டு தேர்தலை நடத்த கோர்ட் உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போன்று செயல்படும் இன்னொரு சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம், இதனை 'தயாரிப்பாளர் கில்டு' என்று சுருக்கமாக அழைப்பார்கள். இந்த சங்கத்தின் தற்போதைய தலைவராக சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் மோதல் காரணமாக கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடக்கவில்லை. தலைவராக தொடர்ந்து ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். ஓய்வு பெற்ற … Read more

பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர் இடத்தை ரஜினிக்கு கொடுத்த ஆர்.எம்.வீரப்பன்

திரைத்துறையிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரிடம் சம்பளம் பெற்ற ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்கே சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவும் மாறினார். 'சத்யா மூவீஸ்' என எம்.ஜி.ஆரின் தாயாரின் பெயரிலேயே திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் முக்கிய படங்களான ரிக்ஷாக்காரன், இதயக்கனி, உள்ளிட்ட படங்களை தயாரித்தார். எம்.ஜி.ஆர் நடிப்பதற்காக 'ராணுவ வீரன்' என்ற கதையை எழுதினார் ஆர்.எம்.வீரப்பன். அப்போது எம்ஜிஆர் அரசியலில் பிசியாகி விட்டதால் அந்த கதையில் அவர் நடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் அளவிற்கு அப்போது சினிமாவில் … Read more

சுதா கொங்கரா உதவி இயக்குநர் உடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ‛லவ்டுடே' படம் மூலம் நடிகராகவும் வெற்றி பெற்றார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இப்போது இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் … Read more

'பையா' குறித்து தமன்னா உற்சாகம்

லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில், கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி வெளியான படம் 'பையா'. யுவன், நா முத்துக்குமார் கூட்டணியின் அருமையான பாடல்கள், அழகான பயணத்துடன் கூடிய காதல் கதை என அப்போது ரசிகர்களைக் கவர்ந்த படம். யுவனின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாகவே அமைந்தது. படம் வெளியாகி 14 வருடங்கள் கழித்து இப்படத்தை ரிரிலீஸ் செய்ய உள்ளார்கள். இது குறித்து படக்குழுவினர் லிங்குசாமி, யுவன், … Read more

சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த விஷ்ணு விஷால், சூரி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷ்ணு விஷால், சூரி இருவரும் இணைந்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் நல்லதொரு வெற்றியைப் பெற்ற படம். அந்தப் படத்தில் இருவரது நகைச்சுவை நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தது. 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் விஷ்ணு விஷால் அறிமுகமானார். சூரி அந்தப் படத்தில் நகைச்சுவை நடிகராக பிரபலமானார். அதன்பின் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அதன்பின் இருவருக்கும் இடையே நடந்த நிலத்தகராறு விவகாரம் ஒன்றில் பிரிந்தனர். விஷ்ணு விஷாலின் அப்பாவும் … Read more

ஓடிடி – வாழ வைக்கிறதா, நசுக்குகிறதா? : கலங்கும் கலையுலகம்

2020ல் கொரோனா தாக்கம் வந்த போது தியேட்டர்கள் மூடப்பட்டன. அந்த சமயத்தில் ஓடிடி நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றன. முக்கிய நடிகர்களின் படங்கள் சிலவும், சில சிறிய படங்களும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. அதன் பின் தியேட்டர்களில் வெளியான படங்களும் ஓடிடிக்காக நல்ல விலைக்கு விற்கப்பட்டன. இந்த நிலை சில வருடங்களிலேயே சரிவை சந்திக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வளர்ச்சியும்… சரிவும்…கடந்த 2020ம் ஆண்டு ஓடிடி தளங்களில் 20க்கும் மேற்பட்ட படங்கள் நேரடியாக வெளியாகின. … Read more