ஏப்ரல் 11ல் விஜய் ஆண்டனி Vs ஜிவி பிரகாஷ்குமார்

இசையமைப்பாளர்களாக இருந்து கதாநாயகர்களாக மாறிய விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் இருவரும் வரும் ஏப்ரல் 11ம் தேதி நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளார்கள். அன்றைய தினம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள 'ரோமியோ', ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'டியர்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இருவருமே கதாநாயகர்களாக மாறிய பின் தொடர்ச்சியாக சில பல படங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இதுவரையில் 15 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் 21 படங்களில் … Read more

பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபனா

தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 2 தேசிய விருதுகளையும் பெற்ற ஷோபனா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது பலர் அறியாத ஒன்று. 1980ம் ஆண்டு வெளிவந்த 'மங்கள நாயகி' என்ற படத்தில் ஷோபனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 10. அறிமுகப்படுத்தியவர்கள் இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'சாஜன் பினா சுஹாகன்' என்ற படத்தின் ரீமேக் இது. ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சரத்பாபு, சிவச்சந்திரன், மனோரமா, நிஷா, … Read more

முதல் வெப்சீரிஸில் நடித்து முடித்த நிவின்பாலி

சினிமாவுக்கு இணையான வேகத்தில் வெப் சீரிஸுகளும் வளர்ந்து வருகின்றன. முன்னணியின் நடிகர்களும் தயக்கமின்றி வெப் சீரிஸில் ஆர்வமாக பங்கேற்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள முன்னணி நடிகரான நிவின்பாலி முதன்முறையாக 'பார்மா' என்கிற வெப்சீரிஸில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். கதாநாயகியாக ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் முக்கிய வேடங்களில் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மருத்துவ துறையில், குறிப்பாக பார்மசூட்டிக்கல்ஸ் எனப்படும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பின்னணியில் நடக்கும் விஷயங்களை … Read more

கனவு அலுவலகம் திறந்தார் நயன்தாரா

நடிகை நயன்தாரா தற்போது நடிப்பு என்பதை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார். படத் தயாரிப்பு ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அழகு சாதன பொருள்கள் விற்பனை நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக இருக்கிறார். இதுதவிர கேரளா, தமிழ்நாடு, ஆந்திராவில் சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறார். இதனை தனது 'கனவு அலுவலகம்' என்று அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு … Read more

குஷ்புவுக்கு உடல்நிலை பிரச்னை

நடிகை குஷ்பு தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். நடைபெற்று வரும் பார்லிமென்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கட்சி தலைமைக்கு எழுதியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது: வாழ்க்கை கணிக்க முடியாதது. நாம் சிறந்த நிலையில் இருக்கிறோம் என உணரும்போது, அது நம்மை சோதிக்கும். 2019ல் டில்லியில் ஏற்பட்ட விபத்தில் எனக்கு முதுகு தண்டுவடத்தின் … Read more

திருமணம் என்பது சினிமா ரிலீஸ் இல்லை : சித்தார்த் கோபம்

சித்தார்த்தும், அதிதி ராவும் கடந்த பல மாதங்களாக ஒன்றாக பல விழாக்களில் கலந்து கொண்டார்கள், ஜோடியாக திரிந்தார்கள். இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் கூறப்பட்டது. தங்கள் காதலை மறைமுகமாக உணர்த்தி வந்தார்கள். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. திருமணம் எப்போது என ரசிகர்கள் அவரை தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருமணம் குறித்து சித்தார்த் கூறியிருப்பதாவது: ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் என்று நிறைய பேர் பேசுகிறார்கள். … Read more

கோயில் திருவிழாவில் 'புஷ்பா' : ஆக்ஷன் டீசர் வெளியீடு

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுனுக்கு இன்று பிறந்தநாள். அதை முன்னிட்டு 'புஷ்பா 2' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் வெளியான படத்தின் போஸ்டரில் உள்ள அதே கெட்டப்பில் இந்த வருட பிறந்தநாளில் டீசரை வெளியிட்டுள்ளார்கள். எதிர்பார்த்ததைப் போலவே அதிரடி ஆக்ஷனுடன் கூடிய மிரட்டலான டீசராகவே அமைந்துள்ளது. கோவில் திருவிழாவில் … Read more

ஓட்டுக்கு பணம் வாங்கலாம் : விஜய் ஆண்டனி சர்ச்சை

தேர்தலின் போது ஓட்டுப்போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்கிற நிலையில் நடிகரும், இசை அமைப்பாளரும், தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கலாம் என்ற சர்ச்சை கருத்தை கூறியிருக்கிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் 'ரோமியோ'. வரும் 11ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோசன் நிகழ்வு நடந்தது. இதைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி … Read more

எஸ்பி முத்துராமனுக்காகக் காத்திருந்த எம்ஜிஆர்

தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் எஸ்பி முத்துராமன். நேற்று அவருடைய 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் செல்லப்பிள்ளை அவர். நேற்றைய அவரது பிறந்தநாளை முன்னிட்டு அந்நிறுவனம் அவரைப் பற்றிய அரிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. ஏவிஎம் நிறுவனத் தயாரிப்பில், பாக்யராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பாக்யராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடித்த 'முந்தானை முடிச்சு' படம் மிகப் பெரும் வெற்றி பெற்று 200 நாட்களைக் கடந்து ஓடிய ஒரு … Read more

விவாகரத்து கேட்டு தனுஷ் – ஐஸ்வர்யா குடும்பநல நீதிமன்றத்தில் மனு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தமிழை தாண்டி ஹிந்தி, ஹாலிவுட் வரை நடித்து விட்டார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ல் இவர் திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவும் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, கடந்த 2022ல் தாங்கள் பிரிவதாக தனுஷ், ஐஸ்வர்யா … Read more