சிரஞ்சீவியின் 2 படங்களை மிஸ் பண்ண 'ஆடுஜீவிதம்' தான் காரணம் : பிரித்விராஜ்

தென்னிந்திய அளவில் தற்போது பிஸியான நடிகர் என்றால் அது நடிகர் பிரித்திவிராஜ் தான். ஒரு பக்கம் தயாரிப்பு, டைரக்சன், இன்னொரு பக்கம் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிப்பு என பிஸியாக வலம் வரும் பிரித்விராஜ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'ஆடுஜீவிதம்'. கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒரு வழியாக வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக … Read more

ஜூலையில் தொடங்கும் ஏ.ஆர்.முருகதாஸ், சல்மான்கான் பட படப்பிடிப்பு

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழைத் தாண்டி ஹிந்தியில் கஜினி, ஹாலிடே உள்ளிட்ட சில வெற்றி படங்களைக் இயக்கியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் மீண்டும் ஹிந்தி படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஹீரோவாக சல்மான்கான் நடிக்கிறார். 2025 ஈத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகிறது என சமீபத்தில் அறிவித்தனர். தற்போது சல்மான் கான் மற்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்க வேண்டும். அதற்கான பணிகளை துவங்க சொல்லி நெருக்கடி … Read more

இரு சிறுவர்கள் குத்தி கொலை முடிதிருத்தும் தொழிலாளி வெறிச்செயல்

பதாயுன், உத்தர பிரதேசத்தில், முடிதிருத்தும் தொழிலாளி, பக்கத்து வீட்டில் வசித்த இரு சிறுவர்களை கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறுதியில் அவர், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உ.பி.,யின் பதாயுன் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் – சங்கீதா என்ற தம்பதிக்கு ஆயுஷ், 12, யுவராஜ், 10, அஹான், 8, என, மூன்று மகன்கள் இருந்தனர். இவரது வீட்டுக்கு எதிரே, சஜித், 22, என்பவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். … Read more

அனுஷ்கா நடிக்கும் புதிய படம் அறிவிப்பு

வம்சி மற்றும் ராஜீவ் ரெட்டி இணைந்து யு.வி.கிரியேஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் சார்பாக தயாரிக்கும் படம் 'காட்டி'. அனுஷ்கா கதையின் நாயகியாக நடிக்கிறார். சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ், கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் புர்ரா சாய் மாதவ் ஆகியோர் எழுதிய கதையை கிரிஷ் இயக்குகிறார். பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. ஒரு அப்பாவி குற்றவாளியாக மாறி லெஜண்ட் அவதாரம் எடுப்பதே படத்தின் கதை. படத்தின் பிரீ-லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது. போஸ்டரில் புடவை அணிந்தபடி … Read more

பாய்லர் விபத்து 4 தொழிலாளர் உயிரிழப்பு

ரேவாரி, ஹரியானாவின் ரேவாரி மாவட்டம், தருஹேரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 16ம் தேதி பாய்லர் வெடித்தது. இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்கள், ரோஹ்டாக் மற்றும் டில்லி சப்தர்ஜங் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், காயம் அடைந்த தொழிலாளர்களில் உ.பி.,யை சேர்ந்த அஜய், 32, விஜய், 37, ராமு, 27, ராஜேஷ், 38 ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து … Read more

ஆடுஜீவிதத்திற்காக 16 வருட பயணம் : பிருத்விராஜ்

மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த மலையாள படம் 'தி கோட் லைப் – ஆடு ஜீவிதம்'. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான நாவலான 'கோட் டேஸ்' கதையை பிளஸ்ஸி திரைப்படமாக உருவாக்கி உள்ளார். பிருத்விராஜ் , அமலாபால் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வருகிற 28ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் … Read more

ஈ.டி., அதிகாரிக்கு இடைக்கால ஜாமின்

புதுடில்லி, திண்டுக்கல், அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, டாக்டர் சுரேஷ்பாபுவை விடுவிப்பதாக கூறி 2023 டிச., 1ல், 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமின் கேட்டு … Read more

வாலிபரை சரமாரியாக தாக்கிய 'சுந்தரா டிராவல்ஸ்' ராதா: போலீசில் புகார்

2002ம் ஆண்டு முரளி, வடிவேலு, நடிப்பில் வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதா. படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தில் நடித்த ராதா அதன் பின்னர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றியடையாததால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவகாரத்து செய்துவிட்டார். முதல் கணவரை விவாகரத்து செய்து … Read more

கருத்தரிப்பு ஆவணங்கள் கேட்டு பஞ்சாப் அரசு துன்புறுத்துகிறது மூஸ்வாலா தந்தை குற்றச்சாட்டு

சண்டிகர், ”எங்களுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அதற்குரிய ஆவணங்களை கேட்டு பஞ்சாப் அரசு துன்புறுத்துகிறது,” என, மறைந்த பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை பால்கவுர் சிங் குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி நடக்கிறது. இங்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கண்ணீர் … Read more

8 மாதங்களுக்கு பிறகு ஜப்பானில் வெளியாகிறது 'ஓப்பன் ஹெய்மர்'

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான படம் ஓப்பன் ஹெய்மர். அணுகுண்ட தயாரித்த விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. கிறிஸ்டோபர் நோலன் படங்களிலேயே குறைவான வசூலை கொடுத்த படமும், அதிக விமர்சனத்தை சந்தித்த படமும் இதுதான். என்றாலும் விருதுகளை குவித்து மறுகவனம் பெற்று வசூலில் சாதனை படைத்தது. இப்படம் இந்த ஆண்டு 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை குவித்தது. இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டாலும் ஜப்பானில் இதுவரை வெளியாகாமல் … Read more