துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பதவி விலகியது ஏன்? அமித்ஷா பதில்

புதுடெல்லி, இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அதுபற்றி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். அந்த கடிதத்தில், உடல் நலனை முன்னிட்டும், மருத்துவ காரணங்களுக்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது பதவி காலத்தில் ஜனாதிபதி எனக்கு … Read more

ஓய்வு பெற்ற புஜாரா: முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் வாழ்த்து மழை

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான புஜாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வு அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அவர் அதன்பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் இன்று ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை (பார்டர்-கவாஸ்கர் கோப்பை) வெல்ல முக்கிய பங்காற்றினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.39 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.26 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. EQ of … Read more

சுதர்சன் ரெட்டி நக்சல் ஆதரவாளர் என பேச்சு; அமித்ஷாவுக்கு முன்னாள் நீதிபதிகள் குழு கடும் எதிர்ப்பு

புதுடெல்லி, நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கார் பதவி விலகிய நிலையில், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கேரளாவின் கொச்சியில் நடந்த … Read more

ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: அனுஷ்கா குமாரி ஹாட்ரிக் கோல்.. பூட்டானை வீழ்த்திய இந்தியா

திம்பு, 7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 4 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். இதில் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே நேபாளம் மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி கண்டிருந்தது. இந்த சூழலில் இந்திய அணி தனது 3-வது … Read more

காசா போர் நிறுத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தி மெலனியா டிரம்புக்கு துருக்கி அதிபரின் மனைவி கடிதம்

அங்காரா, அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் பிரிவினால் வாடும் குழந்தைகளை காரணம் காட்டி உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்தநிலையில் துருக்கி அதிபர் தாயீப் எரோடகனின் மனைவி எமினே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் ஏற்பட புதினுக்கு … Read more

உல்லாசத்திற்கு இடையூறு… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொன்ற மருமகள்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா சிவனி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவரது மனைவி அஸ்வினி (34). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ரமேஷ், மனைவி, குழந்தைகள் மற்றும் தந்தை மல்லேஷ், தாய் தேவிரம்மா (75) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி தேவிரம்மா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மறுநாள் வீட்டில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்கம் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ஏ அணியை வீழ்த்தி ஆஸி.ஏ அபார வெற்றி

பிரிஸ்பேன், இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆஸ்திரேலிய ஏ அணியும், 2-வது நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய ஏ அணியும் கைப்பற்றின. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் கடந்த 21-ம் தேதி ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய ஏ … Read more

ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்த டாக்டர்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே அரசு ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பெண் டாக்டர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ரயான் சோ (வயது 28) என்ற டாக்டர் இரவு நேரத்தில் கழிவறைக்குள் சென்று வருவதை கண்டு பிடித்தனர். … Read more

அரியானா: தூய்மை பணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட வெளிநாட்டினர்

குருகிராம், நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தூய்மையான நகரங்கள் ஆண்டுதோறும் கணக்கெடுப்பின்படி தேர்வு செய்யப்படுகிறது. ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையை கணக்கெடுக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு வரிசைப்படி விருதுகள் வழங்கப்படும். தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குவார். இதன்படி, நடப்பு ஆண்டில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. 8-வது முறையாக தொடர்ந்து முதல் இடம் பிடித்து இந்த … Read more