2வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

துபாய், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துபாயில் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறக்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரசோலி அதிகபட்சமாக 68 … Read more

“எனக்கு ஏதாவது நடந்தால்.. பின்னணியில் ஈரான் இருப்பது தெரிந்தால்..” – கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

வாஷிங்டன், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தலைமைத்துவ விமர்சனங்கள் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானில் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். முன்னதாக ஈரானில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டக்காரர்களை அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை கடுமையாக கண்டித்த அமெரிக்கா, போராட்டக்காரர்களுக்கு … Read more

ஜனாதிபதி மாளிகையை பிப்ரவரி 3 முதல் பொதுமக்கள் பார்க்க அனுமதி

புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஜனாதிபதி மாளிகையில் சர்க்யூட்-1 என்ற பாதையில் சென்று, பிரதான கட்டிடத்தை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க முடியும். இந்த நிலையில், 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கர்தவ்யா பாதையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. தொடர்ந்து 29-ந்தேதி, குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் நிறைவாக ஜனாதிபதி மாளிகை அருகே உள்ள விஜய் சவுக் பகுதியில் … Read more

பிக்பாஷ் டி20 லீக்: மெல்போர்னை வீழ்த்தி ஹோபார்ட் திரில் வெற்றி

ஹோபார்ட் , ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் , மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மெல்போர்ன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஹோபார்ட் … Read more

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பு இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கிறது. சீனா, கனடா, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதித்து வந்த அவர், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவை இலக்காக கொண்டு செயல்பட்டார். அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் கடத்தல் பயங்கரவாதி என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு கூறி வந்த டிரம்ப், திடீரென மதுரோவை அமெரிக்க ராணுவம் உதவியுடள் கைது செய்து, அமெரிக்காவுக்கு … Read more

இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பெரும் பங்கு வகிக்கிறது: திரிபுரா மாநில தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா 1972-ம் ஆண்டு ஜனவரி 21-ந்தேதி தனி மாநில அந்தஸ்து பெற்றது. இதனை முன்னிட்டு திரிபுரா மாநில தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், திரிபுரா மாநில தினத்தில் மாநில மக்களுக்கு என் இனிய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் என இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து திரிபுராவின் பயணம் அமைந்துள்ளது. … Read more

சர்வதேச செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி – குகேஷ் ஆட்டம் டிரா

விஜ்க் ஆன் ஜீ, டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, சக நாட்டவரும், உலக சாம்பியனுமான குகேசை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தின் குகேஷ் 34-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா கண்டார். இதேபோல் … Read more

4-வது குழந்தைக்கு பெற்றோராகும் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ்-உஷா தம்பதி

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் துணை ஜனாதிபதியாக ஜே.டி. வான்ஸ் பதவி வகித்து வருகிறார். இவருடைய மனைவி உஷா வான்ஸ். இந்த தம்பதிக்கு, இவான் (வயது 8), விவேக் (வயது 5) மற்றும் மிராபெல் (வயது 4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், வான்ஸ்-உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறக்க உள்ளது. இதனை அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். அதில், உஷாவுக்கு 4-வது ஒரு குழந்தை பிறக்க உள்ளது. … Read more

அசாமில் மீண்டும் வன்முறை: செல்போன், இணையதள சேவை துண்டிப்பு

கவுகாத்தி, அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் போடோ சமூகத்தை சேர்ந்த 3 பேர் ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் ஆதிவாசி ஒருவர் மீது மோதியதால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வாகனத்தில் வந்தவர்களை ஆதிவாசிகள் தாக்கினர். மேலும், அவர்களது வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. சில வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஒரு கும்பல் தேசிய நெடுஞ்சாலைகளில் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினர். அரசு அலுவலகத்துக்கு தீ … Read more

முதல் டி20 போட்டி: இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்

மும்பை, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் … Read more