கில், ராகுல் இல்லை.. இந்திய அணியில் தற்போது உள்ள ஒரே மேட்ச் வின்னர் அவர்தான் – இங்கிலாந்து முன்னாள் வீரர்

லண்டன், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ டிராபிக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன. இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் … Read more

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

கள்ளக்காதலியை குத்திக்கொன்று இளைஞர் தற்கொலை

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் மலுமு மாவட்டம் சஹலிம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஜோதி குமாரி (வயது 24). இவருக்கும் திருமணமாகி கணவர் உள்ள நிலையில் ஹர்வா மாவட்டம் சிமர்டண்ட் கிராமத்தை சேர்ந்தவர் சுமித் குமாருடன் (வயது 26) ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த கள்ளக்காதல் குறித்து ஜோதியின் கணவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதனிடையே, சுமித் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனால், … Read more

ஆசிய கோப்பை: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை (இரவு … Read more

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், உலகின் முன்னணி இணைய தேடு பொறி நிறுவனமாக ‘கூகுள்’ அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இணைய உலகில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நடத்தி வரும் ‘கூகுள்’ நிறுவனம், தற்போது செயற்கை நுண்ணறிவு துறையிலும் கோலோச்சி வருகிறது. இதற்கிடையில், விளம்பர தொழில்நுட்ப சந்தைக்கு பயனர்களின் தரவுகளை ‘கூகுள்’ நிறுவனம் தவறாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.95 யூரோ(இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி) அபராதம் விதித்தது. இந்த நிலையில், … Read more

சத்தீஷ்காரில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை; தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் ஹிமான்ஷு காஷ்யப்(வயது 24) என்ற மாணவர் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் அவரது நண்பர்கள் விடுதிக்குச் சென்று பார்த்தபோது ஹிமான்ஷுவின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, … Read more

2-வது டி20 போட்டி: இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே

ஹராரே, இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சகோதரி மீது முட்டை வீச்சு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக் -இ – இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான்கான், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இம்ரான் கானின் மீதான டொஷாகானா வழக்கின் விசாரணைக்காக ராவல்பிண்டி சிறைக்கு அவரது சகோதரி அலீமாகான் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுஅலீமா கானின் மீது 2 பெண்கள் முட்டைகளை வீசினர். இதில் ஒரு முட்டை அவரது கன்னத்தில் விழுந்தது. முட்டையை வீசிய 2 … Read more

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு; சாமானிய மக்களுக்கு பெரிய நிம்மதி: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது: “பிரதமர் மோடி எப்போதுமே மக்கள் சார்பு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துபவர், ஆகவே, இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை அவர் தொடருவார். ஜிஎஸ்டி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டை தவறாக வழிநடத்துகின்றன. ஜிஎஸ்டியில் 4 விகித முறை கொண்டுவந்தது பாஜகவின் தனிப்பட்ட முடிவு அல்ல, அதற்கான கமிட்டியால் எடுக்கப்பட்ட முடிவு. ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மூலமாக சாமானிய மக்களுக்கு நிம்மதி ஏற்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து முன்வந்துள்ளன. இந்திய … Read more

2-வது டி20 போட்டி: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு.. இலங்கை 80 ரன்களில் ஆல் அவுட்

ஹராரே, இலங்கை – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கமில் மிஸ்ரா (20 ரன்கள்), சரித் அசலன்கா (18 ரன்கள்) மற்றும் தசுன் ஷனகா … Read more