ரஞ்சி போட்டியில் விளையாடும் சுப்மன் கில்

மும்பை, இந்தியா ஒருநாள் , டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். அவர் பஞ்சாப் அணிக்கு விளையாடுகிறார்.வருகிற 22-ந்தேதி ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணி சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது சவுராஷ்டிராவைத் தொடர்ந்து 29-ந்தேதி கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.தற்போது பஞ்சாப் அணி பி பிரிவில் 5 போட்டிகளில் தலா ஒரு வெற்றி தோல்வியடைந்துள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. 1 More update … Read more

எட்டு தடவைக்கு மேல் எத்தனை தடவை பேசுவது?

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக நட்பு மிளிரும் சரித்திரம் இருந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதில் இருந்தே இந்த உறவில் சற்று விரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்தியாவுக்கு பாதகமாக பல நடவடிக்கைகளை அவர் எடுக்க தொடங்கினார். முதலில் அவர் இந்தியாவுக்கு பரஸ்பர வரி என்ற பெயரில் 25 சதவீத வரி விதித்தார். பின்னர் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் அந்த நிதி மூலம்தான் ரஷியா உக்ரைனில் ரத்தக் களறியை … Read more

தனிக்கட்சி தொடங்க திட்டமா? பிரசாந்த் கிஷோருடன் கவிதா ஆலோசனை

ஐதராபாத், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் முன்னாள் எம்.பி. ஆவார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது உறவினர்கள் ஹரிஷ் ராவ், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது கவிதா குற்றம் சாட்டினார். அதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், தனது எம்.எல்.சி. பதவியை கவிதா ராஜினாமா செய்தார். தெலுங்கானா … Read more

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி – மும்பை அணிகள் இன்று மோதல்

வதோதரா, 5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள 13வது ஆட்டத்தில் டெல்லி – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. புள்ளி பட்டியலில் மும்பை … Read more

ஆப்கானிஸ்தான்: காபூலில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு

காபூல், காபூலில் நடந்த குண்டு வெடிப்பு, காபூல் நகரின் நான்காவது மாவட்டத்தில் உள்ள குல்பரோஷி தெருவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டல் அருகே ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு உடனடியாக பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர், அப்துல் மதீன் குவானி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஆரம்பகட்ட தகவல்படி, பலர் கொல்லப்பட்டு, காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான … Read more

டெல்லியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு

புதுடெல்லி, டெல்லியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.44 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.86 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.06 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of M: 2.8, … Read more

நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள்…முதலிடத்தில் ‘கோலி’

சென்னை, நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது 85-வது சதமாகும். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரல் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் … Read more

ஸ்பெயின் ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு; 100 பேர் காயம்

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டின் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதனால், அந்த அதிவிரைவு ரெயில், அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த, அரசால் நடத்தப்படும் ரெயில் மீது மோதியது. … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாத தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் வெளியீடு

திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிப்பதற்கான பல்வேறு சேவை டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியாக உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவா உள்ளிட்டவை இன்று (19ம் தேதி) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த சேவை டிக்கெட்டுகளை ஜனவரி 21ம்தேதி காலை 10 மணி வரை மின்னணு … Read more

சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார் எரிகைசி

விஜ்க் ஆன் ஜீ, டாட்டா ஸ்டீல் 88-வது சர்வதேச செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 1-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 32-வது காய் நகர்த்தலில் நடப்பு சாம்பியனான தமிழகத்தின் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய உலக … Read more