ஏ.டி.பி. இறுதி சுற்று : ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி

துரின், உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் இளம் வீரரும், தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் டெய்லர் ப்ரிட்சை சந்தித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 7-6, 6-1 என்ற செட் கணக்கில் டெய்லர் … Read more

800 கோடியை எட்டுகிறது உலக மக்கள் தொகை

நியூயார்க், பூமியின் மக்கள்தொகை எகிறிக்கொண்டே செல்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது. ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ஒருவர் நாம்! பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடி ஆகப்போகும் தகவல், கடந்த ஜூலை 11-ந் தேதி, ஐ.நா.வால் வெளியிடப்பட்டது. உலக மக்கள்தொகை தினமான அன்றைய நாளில் வெளியான ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை … Read more

போக்சோ சட்டம்: சிறார்கள் சம்மதத்துடன் உறவு கொள்வதை குற்றமாக கருத முடியாது – டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!

புதுடெல்லி, 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில், கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டமாகும். 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவள் குடும்பத்தால் ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.ஆனால் சிறுமி … Read more

பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ் தொடர்- சாம்பியன் பட்டம் வென்ற சுவிஸ். மகளிர் அணி

ஸ்விட்சர்லாந்து, ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்து மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன் சுவிட்சர்லாந்து மகளிர் அணி மோதியது. இதில் முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் டெய்ச்மேன், ஆஸ்திரேலிய வீராங்கனை ஸ்டோர்ம் சேன்டர்ஸை 6க்கு 3, 4க்கு 6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வென்றார். இதேபோல், பெலிந்தா பென்சிக் 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் அஜ்லாவை … Read more

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான 'ஜாய்லேண்ட்' பாகிஸ்தான் திரைபடத்துக்கு தடை

இஸ்லாமாபாத் ஆஸ்கார் விருதுக்கு பாகிஸ்தான் சார்பில் ‘ஜாய்லேண்ட்’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜாய்லேண்ட்’ படத்திற்கு ஆகஸ்ட் 17 அன்று பாகிஸ்தான் அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த் திரப்படம் குறித்து பாகிஸ்தானில் சர்ச்சைக்கள் கிளம்பின. சமீபத்தில் அதன் கதை குறித்து ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. இந்த திரைப்படத்தை தடை செய்ய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு கோரிக்கைகள் குவிந்தன. நவம்பர் 11 அன்று வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் “சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீக தரங்களுடன்” இந்த … Read more

மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் கட்டாய மதமாற்றம்; 10 பேர் மீது பாய்ந்தது வழக்கு

தமோ, மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் உள்ள அனாதை இல்லங்கள் மற்றும் கிறிஸ்தவ மிசனெரிகளால் நடத்தப்படும் குழந்தைகளின் காப்பகம் ஆகியவற்றிற்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ நேற்றிரவு திடீர் ஆய்வுக்காக சென்றுள்ளார். அவரது வருகை பற்றி மாவட்ட அதிகாரிகளுக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அவருடன் மத்திய பிரதேச மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் உறுப்பினர் ஓம்கார் சிங் மக்ராம் மற்றும் உயரதிகாரிகள் பலர் சென்றுள்ளனர். இந்த ஆய்வில், கிறிஸ்தவ … Read more

உலக பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து விலகல்

புதுடெல்லி, உலக டூர் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சீனாவின் குவாங்சோவ் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து உலகின் 5-ம் நிலை வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான இந்தியாவின் பி.வி.சிந்து விலகியுள்ளார். கடந்த ஆகஸ்டு மாதம் காமன்வெல்த் விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற போது இடது கணுக்காலில் காயமடைந்த சிந்து அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. ‘புதிய சீசனை தொடங்குவதற்கு முன்பாக காயத்தில் இருந்து முழுமையாக … Read more

துருக்கி குண்டுவெடிப்பு தாக்குதல்; சந்தேக நபர் கைது: துருக்கி உள்துறை மந்திரி

இஸ்தான்புல், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடைகள் அதிகம் நிறைந்த இஸ்திக்லால் பகுதியில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 81 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கி நாட்டு உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது என்று இஸ்தான்புல் கவர்னர் அலி யெர்லிகாயா கூறினார். இந்த வீதியில் பல கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. இங்கு இதற்கு முன் 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் … Read more

அசாமில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதியை சுற்றி வளைத்து என்கவுன்டர் – பாதுகாப்பு படை தகவல்

கவுகாத்தி, அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே என்கவுன்டர் நடந்து வருகிறது. டின்சுகியா மாவட்டத்தில் உள்ள பெங்கேரி-டிக்போய் சாலையில் உள்ள போர்பதர் பகுதியில் இந்திய ராணுவம், அசாம் மாநில போலீசார் மற்றும் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு இடையே என்கவுன்டர் நடந்து வருகிறது. இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், டின்சுகியா மாவட்டத்தில் பெங்கேரி-டிக்போய் சாலையில் போர்பத்தர் பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் என்கவுன்டர் தொடங்கியது. பாதுகாப்பு படையினரும், … Read more

டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.13.84 கோடி பரிசு

சிட்னி, ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் நிறைவடைந்தது. மெல்போர்னில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 … Read more