தேசிய கட்சி தொடங்கும் சந்திரசேகர ராவ்; மதுப்பிரியர்களுக்கு மது, உயிர் கோழி இலவசமாக கொடுத்த டிஆர்எஸ் நிர்வாகி

ஐதராபாத், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரான இவர் தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கில் தேசிய கட்சி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு மாநில தலைவர்களை சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ் இன்று தனது புதிய தேசிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரசேகர ராவ் தேசியக்கட்சி தொடங்க உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கானாவின் வாராங்கல் … Read more

நாங்கள் அனைத்துத் துறைகளிலும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் – ரோகித் சர்மா

இந்தூர், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா … Read more

இந்தோனேசிய கால்பந்து மைதான வன்முறை விவகாரம் – கால்பந்து கிளப்பிற்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிப்பு

ஜகார்தா, இந்தோனேசியாவின் மலாங்க் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் உயிரிழந்ததாகவும், 180-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கால்பந்து கிளப்பின் அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இதே போல் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல் காந்தி – சசி தரூர்

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தோடு சசி தரூர் மற்றும் கார்கே தீவிர நடவடிக்கைகளில் … Read more

தேசிய விளையாட்டுப் போட்டி – 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றார்

காந்திநகர், 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் சென்று அசத்தினார். பந்தய தூரமான 200 மீட்டரை சுமார் 23 வினாடிகளை கடந்து அர்ச்சனா சுசீந்திரன் வெற்றி பெற்றார். அசாமைச் சேர்ந்த முன்னனி வீராங்கனை ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி அர்ச்சனா தங்கப்பதக்கத்தை … Read more

டுவிட்டர் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தைத் தொடர முன்வந்த எலான் மஸ்க்..!!

வாஷிங்டன், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டுவிட்டரின் ஒரு பங்கிற்கு … Read more

ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி மர்ம மரணம்: போலீசார் விசாரணை

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா (57). சிறைத்துறை டி.ஜி.பி. லோஹியா, 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார். இந்நிலையில், லோஹியா நேற்று வீட்டில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், குடும்ப … Read more

உலக கோப்பை போட்டியில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியாதா..? டேவிட் மில்லர் ஆதங்கம்

கவுகாத்தி, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வரிசையாக தோற்ற தென்ஆப்பிரிக்கா தொடரையும் இழந்து விட்டது. கவுகாத்தியில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 237 ரன்கள் குவித்த போதிலும் போராடி தான் வெற்றி பெற முடிந்தது. டேவிட் மில்லரின் தடாலடியான சதத்தால் தென்ஆப்பிரிக்கா 221 ரன்கள் வரை நெருங்கி வந்து அச்சுறுத்தியது. தோல்விக்கு பின் தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.37 கோடியாக உயர்வு

ஜெனீவா, சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,551,600 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

புதிய நாடாளுமன்றத்தை இணைத்து துணை ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை: மத்திய அரசு டெண்டர் வெளியீடு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் நாட்டின் அதிகார மைய கட்டிடங்களை புதிதாக அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம், பொது தலைமை செயலகம், புதிய பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம், புதிய துணை ஜனாதிபதி மாளிகை (வீடு மற்றும் அலுவலகம்) ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ராஜபாதை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள கட்டிடங்களின் பணிகளும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. … Read more