மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 3 வீரர்கள் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, தென்கிழக்கு மாகாணமான தபாஸ்கோவில் கவுதமலா நாட்டு எல்லைக்கு அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் விமானிகள் உள்பட கடற்படை வீரர்கள் 5 பேர் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் தபாஸ்கோவில் உள்ள சென்ட்லா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் அதற்குள் … Read more

சோனியாகாந்தி குடும்பம் என்னை ஆதரிப்பதாக கூறுவது தவறு – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல், வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திரிபாதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் மட்டும் களத்தில் உள்ளனர். இந்தநிலையில், மல்லிகார்ஜுன கார்கே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சோனியாகாந்தி குடும்பத்தின் ஆதரவு பெற்றவராக அவர் கருதப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- சோனியாகாந்தி குடும்பம் என்னை ஆதரிப்பதாக … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி: இந்திய கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை

கவுகாத்தி, இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் முதல் மற்றும் 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி வரும் செவ்வாய் கிழமை நடைபெறுகிறது. இதில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய … Read more

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமல்..!

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 92 ரக பெட்ரோலின் விலையில் 40 ரூபாய் குறைக்கப்பட்டு 410 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைக்கபப்ட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிற எரிப்பொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக வெளியான தகவல் இலங்கை மக்களுக்கு … Read more

சக குடிமக்கள் சார்பில் தேசத்தந்தைக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன் – ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காந்தியடிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில், ‘மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளில், சக குடிமக்கள் சார்பில் தேசத்தந்தைக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். காந்தி ஜெயந்தி என்பது, அமைதி, சமத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் காந்தியடிகளின் எழுச்சியூட்டும் வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு நாம் அனைவரும் நம்மை மீண்டும் அர்ப்பணிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்’ … Read more

தேசிய விளையாட்டு போட்டி: போல்வால்ட்டில் தமிழக வீராங்கனை ரோசி புதிய தேசிய சாதனை

காந்திநகர், 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று காந்திநகர் மைதானத்தில் நடந்த தடகள போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி கணிசமான பதக்கங்களை அறுவடை செய்தனர். பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீராங்கனை ரோசி மீனா 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் … Read more

சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதி!

வாஷிங்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவர்த்தை அமெரிக்காவில் பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகளை வரவேற்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறுகையில், தைவான் ஜலசந்தியில் சீனாவின் அதிகரித்து வரும் ஆக்ரோஷமான … Read more

பண்ணைவீட்டில் விபசார விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவருக்கு ஜாமீன் – மேகாலயா ஐகோர்ட் உத்தரவு

மேகாலயா: மேகாலயா பா.ஜனதா துணைத் தலைவர் பெர்னார்ட் என். மரக் கேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் துராவில் ஒரு பண்ணை வீடு உள்ளது. அங்கு விசார விடுதி நடத்தபடுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து 23 பெண்கள், 73 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், ஐந்து சிறுமிகளையும் போலீசார் மீட்டனர். … Read more

தொடரை வெல்லப்போவது யார்? – கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

லாகூர், பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 6 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகள் பெற்று தொடர் 3-3 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி … Read more

அமெரிக்க மாகாணத்தை நிலைகுலைய வைத்த 'இயான்' புயல்: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

வாஷிங்டன், அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற ‘இயான்’ புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. இந்தப் புயல், 4-ம் வகை புயலாக கேயோ கோஸ்டா அருகே பெரும் மழையைக் கொண்டு வந்தது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. இது புளோரிடா மாகாணத்தைத் தாக்கிய பின்னர் மெதுவாக வலுவிழந்து 2-வது வகை … Read more