முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் நாளை பலப்பரீட்சை

ஹராரே, லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை ( 18-ந்தேதி) நடக்கிறது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டி யிலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கிறது. ரோகித் சர்மா , ரிஷப் பண்ட் , வீராட் கோலி, பும்ரா … Read more

அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி- சீன அரசு அறிவிப்பு

பிஜிங், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு குழந்தை விதி” கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்த படியே வந்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப் பட்டது. கடந்த ஆண்டு 3 குழந்தைகள் பெற்று கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்தது. கடந்த ஆண்டு சீனாவில் … Read more

டெல்லியில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு..!!

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 16,658 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 88 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,702 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா … Read more

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம்

கொல்கத்தா, ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் இந்த அணியின் உரிமையாளர்களாக உள்ளனர். கடந்த ஏப்ரல்-மே மாதம் நடைபெற்ற 15-வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதற்கு முந்தைய சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது அந்த அணி. இந்த சூழலில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் நியமிக்கப்பட்டதையடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் … Read more

மனிதர்களிடம் இருந்து நாய்க்கு பரவிய குரங்கு அம்மை- உலக சுகாதார அமைப்பு அதிரடி எச்சரிக்கை

ஜெனீவா, ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. உலக முழுவதிலும் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தி உள்ளன. உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்து இருந்தது. இந்த … Read more

ஆன்லைன் மூலம் ரூ.21 லட்சத்தை 'அபேஸ்' செய்த வாலிபர் கைது-சைபர் கிரைம் போலீசார் பிடித்தனர்

மைசூரு: ஆன்லைன் மூலம்… மைசூரு டவுனில் எச்.டி.எப்.சி. வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமானோர் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலமாக ஒருவர் ரூ.21 லட்சத்து 2 ஆயிரத்து 41-ஐ அபேஸ் செய்து இருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதையடுத்து வங்கி அதிகாரிகள் இதுபற்றி மைசூரு மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். … Read more

மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேனா?- எலான் மஸ்க் விளக்கம்

வாஷிங்டன், உலக பெரும் பணக்காரராரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போவதாக இன்று டுவீட் செய்து இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் , நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும் ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன் என தெரிவித்து இருந்தார். இந்த பதிவை தொடர்ந்து சில நிமிடங்களிலே மற்றொரு பதிவில் நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை … Read more

உலக அளவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது – உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா, ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது. உலக முழுவதிலும் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தி உள்ளன. இந்தநிலையில், உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 12 பேர் … Read more

மைசூரு தசரா யானைகளை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்கள் பொருத்தம்

மைசூரு: 14 கண்காணிப்பு கேமராக்கள்… மைசூரு தசரா விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 26-ந் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 5-ந் தேதி தசரா விழா நிறைவு பெறுகிறது. இதற்கிடையில் யானைகள் ஊர்வலம், தங்க அம்பாரி ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த யானைகள் ஊர்வலத்திற்காக துபாரே, மத்திகோடு, ராம்புரா முகாம்களில் இருந்து 14 யானைகள் மைசூருவிற்கு அழைத்து வரப்பட்டது. இந்த யானைகள் அனைத்தும் மைசூரு அரமணையில் உள்ள தனி முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை சுற்றுலா … Read more

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 141 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகிறது; பாகிஸ்தானுடன் எதுவும் இல்லை…!

சென்னை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023-27 ஆண்கள் கிரிக்க்கெட் அணியின் சுற்றிப்பயண பட்டியலை வெளியிட்டு உள்ளது. 2023-27 சுழற்சியில் 12 நாடுகள் மொத்தம் 777 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார்கள். , இது கடந்த 694 போட்டிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இந்த காலகட்டத்தில் 12 நாடுகள் 173 டெஸ்ட், 281 ஒருநாள் மற்றும் 323 டி20 போட்டிகளில் விளையாட உள்ளன. 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டு காலங்களில் இந்தியா மொத்தம் 141 சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் … Read more