ராம்புராவில் விரைவில் உலக யானைகள் தினம் கொண்டாட்டம்: பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் தகவல்

கொள்ளேகால்: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நேற்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொள்ளேகால் தாலுகா பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் ரமேஷ் கூறுகையில்:- உலகம் முழுவதும் யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுவது இல்லை. தினமும் கொண்டாடவேண்டும். ஏனென்றால் வனப்பகுதிகள் பாதுகாப்பில் யானைகளின் பங்கு மிகவும் முக்கியம். இந்தியா முழுவதும் 49 ஆயிரத்திற்கும் அதிகமான யானைகள் உள்ளது. சாம்ராஜ்நகரில் 6 ஆயிரம் யானைகள் உள்ளன. பந்திப்பூரில் மட்டும் … Read more

ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பைக்கான வங்காளதேச அணி கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம்

டாக்கா, ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷகிப் அல் ஹசன் வரவிருக்கும் ஆசியக் கோப்பையில் வங்காளதேச அணியை வழிநடத்துவது மட்டுமல்லாமல், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரையும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் … Read more

தைவானை ஆதரிக்கும் உறுதியான நடவடிக்கைகள் தொடரும்- அமெரிக்கா

வாஷிங்டன், சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவான தைவானை, தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் ஒரே நாடு கொள்கையை உறுதிப்படுத்த இது போன்ற போர்ப்பயிற்சிகள் தொடரும் எனவும் சீனா எச்சரித்துள்ளது. … Read more

நாட்டில் விடுதலைக்கு உயிர் தியாகம் செய்தவர்கள் பங்கு அதிகம்: மண்டியா நகரசபை தலைவர் மஞ்சுநாத் பேட்டி

மண்டியா: மண்டியா டவுன் பகுதியில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் விடுதலை போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின்போது பேசிய நகரசபை தலைவர் மஞ்சுநாத் கூறியதாவது:- இந்தியாவின் விடுதலைக்கு பலர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். விடுதலையில் அவர்களின் பங்கு அதிகமாகும். இது அனைவர் மனதிலும் மிகவும் வலியை ஏற்படுத்தியது. வாகன வசதி இல்லாத காலத்தில் … Read more

உங்களுடன் பேசுவதில் பெருமைப்படுகிறேன்: காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களை சந்தித்து பிரதமர் மோடி உரை..!

புதுடெல்லி, 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்து சென்றனர். 12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி … Read more

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 2,144 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக … Read more

தலைநகர் டெல்லியில் மேலும் 2 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 82 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 9 … Read more

"ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தும்" – ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பரம போட்டியாளர்களான இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன. அதன் பிறகு சூப்பர்-4 சுற்றிலும் இவ்விரு அணிகளும் சந்திக்க உள்ளன. கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் இறுதிப்போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்த வேண்டி வரும். இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரை … Read more

நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள்.. இங்கிலாந்து மக்களுக்கு வந்த சோதனை

லண்டன், இங்கிலாந்தில் கோடைகாலத்தின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தென் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் கிழக்கு இங்கிலாந்து முழுவதுமாக வறட்சி அறிவிக்கப்பட்டு உள்ளது. வறட்சி பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நீத்தேக்கங்களில் வழக்கத்தை விடவும் நீரின் அளவு குறைந்து கானப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுகளின் நீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகபட்சமாக நேற்று ஒருசில பகுதிகளில் 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திங்கட்கிழமை லண்டனை … Read more

பஞ்சாபில் 'ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம்' சட்ட மசோதா – மாநில கவர்னர் ஒப்புதல்

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, ‘ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம்’ என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவின் மூலம், ஒரு சட்டமன்ற உறுப்பினர் எத்தனை முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ஒரே ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்க வழிவகை … Read more