மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் இகா ஸ்வியாடெக்கும், 2வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் டயானா ஷ்னைடரும் கைப்பற்றினர். தொடர்ந்து வெற்றியாளரை … Read more

சீனா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து – 22 பேர் பலி

பீஜிங், சீனாவின் லியோயிங் மாகாணம் லியாயங் நகரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று மதியம் 12.30 மணியளவில் 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டலில் தீ பற்றியது. இந்த சம்பவத்தில் ஓட்டலில் இருந்த 22 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த தீ … Read more

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு சஞ்சீவ் கன்னாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்து, தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் (பி.ஆர்.கவாய்) பெயரை சஞ்சீவ் கன்னா பரிந்துரை … Read more

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் கடற்கரையில் சடலமாக மீட்பு – அதிர்ச்சி சம்பவம்

ஒட்டாவா, பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21) . வன்ஷிகா கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்றார். அவர் ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்த வீட்டில் தங்கி இருந்த சக மாணவிகளிடம் , வேறு வாடகை … Read more

நள்ளிரவு 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

ஆந்திராவில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்படாத அண்ணாமலை..!

அமராவதி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாஜகவின் உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதுவரை கிளைத் தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக வின் தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி தமிழக பாஜக தலைவராக நயினார் … Read more

35 பந்துகளில் சதம்… சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க … Read more

இங்கிலாந்து: பாகிஸ்தான் தூதரகத்தின் கண்ணாடி உடைப்பு; இந்தியர் கைது

லண்டன், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு … Read more

மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய கர்நாடக முதல்வர்

பெலகாவி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகிவரும் நிலையில், பாகிஸ்தானுடன் ‘போர் தொடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சு பாகிஸ்தான் நாட்டு ஊடகங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து அவரை பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து விளக்கம் அளித்த சித்தராமையா, போர் தீர்வாகாது என்று கூறியதாகவும், தவிர்க்க முடியாத சூழலில் போர் வரலாம் என்று கூறியதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில், பொது இடத்தில் … Read more

வைபவ், ஜெய்ஸ்வால் அதிரடி… ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவும், அதே வேளையில் மோசமான பந்துகளை பவுண்டரிகள் அடித்து ரன்கள் குவித்தனர். இதில் கேப்டன் சுப்மன் அரைசதம் … Read more