நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப்பெற்றால் நாடாளுமன்றத்தை கலைக்க தயார் – இம்ரான்கான்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வால்,  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்கள் பலன் அடைவர். நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை  உயர்த்தி வழங்கப்படும். நாட்டில் தற்போது எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழலில், அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான … Read more

ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலனை

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்தி வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை காண 25 சதவீத ரசிகர்களுக்கு மட்டும் தற்போது பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா … Read more

ராணுவ தளபதியுடன் சந்திப்பு: நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த இம்ரான்கான்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெற உள்ளது.  இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி … Read more

எரிபொருள் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் – மத்திய அரசை விமர்சித்த ஆதித்ய தாக்கரே

மும்பை, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு குறித்து மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். மராட்டிய மாநில சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது. அதனால், தற்போது எரிபொருள் விலை அதிகரித்துவிட்டது. விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.  விலைவாசி குறைய … Read more

அதிகமான வீரர்கள் சுனில் சேத்ரியை போல இருக்க விரும்புகிறார்கள்; லூயிஸ் கார்சியா

புதுடெல்லி, லிவர்பூல் மற்றும் பார்சிலோனா அணிகளில்  ஸ்டிரைக்கராக விளையாடிய முன்னாள் கால்பந்தாட்ட வீரர் லூயிஸ் கார்சியா, எதிர்காலத்தில் இந்திய கால்பந்தாட்டத்தின் திறனை ஆதரித்து பேசினார்.  இந்திய கால்பந்தாட்டத்தின் திறமையை கார்சியா நன்கு அறிந்தவர் ஆவார். 2014 இல் இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது, அவர் ஐ.எஸ்.எல் கால்பந்தில் பங்கேற்றுள்ளார் ஐ.எஸ்.எல் கால்பந்து லீக்கின் தொடக்கப் பதிப்பில்,  43 வயதான ஸ்பெயின் வீரர் லூயிஸ் கார்சியா  ‘அட்லெடிகோ டி கொல்கத்தா’ அணியை  ஐஎஸ்எல் கோப்பையில் … Read more

சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய லாக்டவுன்..!

பீஜிங், உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் 4-வது அலை, மெல்ல உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்கொரியா மற்றும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இப்போது அதிகமாக உள்ளது. கொரோனா முதன்முதலில் பரவ தொடங்கிய காலகட்டத்தில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் இல்லையென்றாலும்,  சீனா முதல் அலையை சமாளித்துவிட்டதாக தெரிவித்தது.  உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய இரண்டாவது அலையில், டெல்டா வகை கொரோனா வைரசை சமாளித்துவிட்டதாக சீனா தெரிவித்தது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1 லட்சத்து … Read more

தேசிய நெடுஞ்சாலைகளில் 28 இடங்களில் போர் விமானங்களை தரையிறக்க முடியும்: மத்திய அரசு

புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களை 28 இடங்களில் அவசர காலத்திற்கு  தரையிறக்க முடியும் என்று   மத்திய  சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அசாமில் 5 இடங்களிலும், மேற்கு வங்காளத்தில் 4 இடங்களும், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 3 இடங்களிலும் பீகார், அரியானா, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 2 இடங்களிலும் பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் ஒரு இடத்திலும் போர் விமானங்களை அவசர காலத்தில் தேசிய … Read more

தொடக்கத்திலே அடுத்தடுத்து ஆட்டமிழந்த பாப் டு பிளெஸ்சிஸ், விராட் கோலி- பெங்களூரு அணி திணறல்

 மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன்  பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரகானே 9 ரன்களிலும் வெங்கடேஷ் … Read more

செஞ்சிலுவை சங்க கட்டிடம் மீது ரஷியா தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு

கீவ்,   உக்ரைன் மீது ரஷியா 35-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சிலுவை சங்கம் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி … Read more