கொரோனோ பரிசோதனைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரலாம்: சீனாவின் ஷாங்காய் நகரில் மிகக் கடுமையான ஊரடங்கு

ஷாங்காய், சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் தனிமை  முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது சீன அரசு . ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது.  சீனாவின் ஷாங்காய் நகரில் மிகக் … Read more

முப்படை பணியில் 10,303 பெண் அதிகாரிகள்; மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, நாட்டில் உள்ள விமான, கடல் மற்றும் ராணுவம் ஆகிய முப்படைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு பதவிகளில் பணியமர்த்தப்பட்டு சிறப்புடன் செயலாற்றி வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையில் மத்திய பாதுகாப்பு துறை இணை மந்திரி அஜய் பட் இன்று பேசும்போது, நாட்டில் உள்ள முப்படைகளில் 10 ஆயிரத்து 303 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.  அவர்களில் மருத்துவர்கள், ராணுவ செவிலியர் சேவை அதிகாரிகளும் அடங்குவர்.  இந்திய ராணுவத்தில் 100 பெண்கள் ராணுவ வீராங்கனைகளாக பணியாற்றி … Read more

ஐபிஎல்: குஜராத்திற்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லக்னோ

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி லக்னோஅணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல் ராகுலும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். கே.எல்.ராகுல் சந்தித்த முதல்  பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். டி காக் 7 ரன்னில் அவுட்டானார். … Read more

இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டாலர் கடனுதவி கோரும் இலங்கை

புதுடெல்லி, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.  மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடி வருகின்றனர்.  எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல … Read more

தெலுங்கானாவில் ரூ.1,800 கோடியில் கட்டப்பட்ட பிரமாண்ட கோயில்

தெலுங்கானா, தெலுங்கானாவின் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில், லட்சுமி நரசிம்மரின் குடைவரை கோவில் உள்ளது. தலைநகர் ஐதராபாத்தில் இருந்து, 70 கி.மீ., தொலைவில், மலைமேல் அமைந்துள்ள இந்த கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது.  இந்த கோவிலுக்கு அம்மாநில அரசு  ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கி  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இணையாக மிகவும் பிரமாண்டமான முறையில் புணரமைக்க திட்டமிட்டு கட்டிடப்பணிகள் நடைபெற்றது. 7 கோபுரங்களை கொண்ட இந்த கோவில், ஆத்ம சாஸ்திரங்களை பின்பற்றி 14 ஏக்கர் பரப்பளவில் கோவிலின் திருப்பணிகள் … Read more

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது: ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி, பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், முதற்கட்டமாக கடந்த 21 ஆம் தேதி வழங்கினார். இந்த நிலையில், இன்று 2 … Read more

இஸ்ரேல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 2 போலீசார் பலி

ஜெருசலேம், இஸ்ரேலின் ஷரோன் மாகாணம் ஹடீரா நகரில் நேற்று இரவு உணவகம் அருகே சில போலீசார் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த இருவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பொதுமக்களில் சிலரும் படுகாயமடைந்தனர்.  இதனை தொடர்ந்து அந்த உணவகம் அருகே நின்றுகொண்டிருந்த போலீசார் தாக்குதல் நடத்திய இருவரையும் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், இஸ்ரேல் … Read more

கர்நாடகத்தில் மதரசாக்களுக்கு தடை விதிக்க வேண்டும்- ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பெங்களூரு,  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ரேணுகாச்சார்யா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் மதரசாக்களில் நமது தொலைநோக்கு பார்வை குறித்த கொள்கைகள், நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த தலைவர்கள் குறித்து கற்பிப்பது இல்லை. அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மட்டுமே கற்பிக்கிறார்கள். சமூக விரோத செயல்கள் குறித்து கற்பிக்கிறார்கள். இது அங்கு படிக்கும் அப்பாவி குழந்தைகளின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் மதரசாக்களுக்கு தடை விதிக்க வேண்டும். அரசு … Read more

ஐபிஎல்: டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு தேர்வு

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ஸ்அணி முதலில் விளையாடி வருகிறது

பாகிஸ்தான்: பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விபத்து – 7 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மர்டன் மாவட்டத்தில் இருந்து கால்கொட் நகர் நோக்கி இன்று ஒரு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 20-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். வேன் உப்பர் டீர் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது செங்குத்தான வளைவில் திரும்ப முயற்சித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 10 பேர் … Read more