மத்திய அரசு அலுவலகங்களில் 100 சதவிகித பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்
புதுடெல்லி, கொரோனா 3வது அலை காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவிகிதம் பேர் மட்டும் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளதால் மீண்டும் அனைத்து பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.