ஜெர்மனியில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

பெர்லின், உக்ரைன்-ரஷியா போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷிய டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ரஷியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ராணுவ பலத்தை பெருக்க அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை ராணுவ சேவையில் இணைக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு தன்னார்வ அடிப்படையிலும் இருக்கும். போர் ஏற்படும் காலங்களில் இவர்கள் ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் … Read more

எதிர்காலத்தை கட்டமைத்த மோடி-புதின் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியை விதித்தார். பின்னர் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் அந்த நிதியை வைத்து தான் ரஷியா, உக்ரைன் நாட்டுடன் போரிடுகிறது என்றார். அதற்காக இந்தியாவிற்கு கூடுதலாக அபராத வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தார். ஆனால் இந்தியா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. எனவே டிரம்ப், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரஷிய நிறுவனங்களுக்கு புதிய … Read more

டி20 கிரிக்கெட்: இதுவரை எந்த வீரரும் படைத்திராத சாதனையை படைத்த ரசல்

ஷார்ஜா, 6 அணிகள் இடையிலான சர்வதேச டி20 லீக் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெசர்ட் வைப்பர்ஸ் – அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 53 ரன்களும், ரசல் 36 ரன்களும் அடித்தனர். இதனையடுத்து 172 ரன்கள் … Read more

இங்கிலாந்தில் கைதியுடன் தகாத உறவில் இருந்த பெண் அதிகாரிக்கு சிறை

லண்டன், இங்கிலாந்தின் வெதர்பி நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சுமார் 200 தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் அதிகாரியாக இருந்தவர் மேகன் கிப்சன். இவர் சிறையில் இருந்த ஒரு கைதியுடன் தகாத உறவில் இருந்ததாக சக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட புகார்களை அனுப்பினர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த கைதிக்கு சிறையில் போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை லீட்ஸ் கிரவுன் … Read more

கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் 25 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

டெல்லி, கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜி அருகே அர்புரா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கேளிக்கை விடுதியில் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவா கேளிக்கை விடுதி தீ … Read more

உலகக் கோப்பை கால்பந்து: நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ ?

பெர்லின், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா உள்ளிட்ட 48 அணிகள் இடையிலான 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடக்கிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் 48 அணிகளும் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங் களை … Read more

புதின் இந்தியா வருகை எதிரொலி: ‘அந்தர் பல்டி’ அடித்த அமெரிக்கா

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடா்ந்து ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையை பின்பற்ற தொடங்கினார். மேலும் இந்தியா மீதான வன்மத்தை ஆரம்பம் முதலே தொடர்ந்தார். குறிப்பாக இந்தியா மீது அதிகபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரிவிதிப்பு, சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி இந்தியர்களை கைவிலங்கிட்டு நாடு கடத்தியது, இந்தியர்கள் அதிகம் பெறும் அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.90 லட்சமாக (1 மில்லியன் டாலர்கள்) உயர்த்தி அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு சங்கடங்களை கொடுத்தார். இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, … Read more

தொண்டையில் பேரிச்சம் பழம் சிக்கி தெலுங்குதேசம் கட்சி தொண்டர் பலி

நகரி, ஊட்டசத்துகள் அதிகம் நிறைந்த பழம் பேரிச்சம் பழம். எனவே பலரும் இதனை விரும்பி உண்பது வழக்கம். ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டு ஒருவர் இறந்ததாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆந்திராவின் சத்யசாயி மாவட்டம் பெனுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர் (வயது 42). தெலுங்குதேசம் கட்சி தொண்டர். இவர் பேரிச்சம் பழம் சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்று அவர் பேரிச்சம் பழத்தை அவசரமாக சாப்பிட்டதாக … Read more

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

தோகா, உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சுருசி சிங் 245.1 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு இந்திய வீராங்கனை சைன்யம் (243.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மானு பாக்கர் (179.2 புள்ளி) 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார். 1 More … Read more

டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கிய பிபா அமைப்பு

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா–பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என்றும் டிரம்ப் எதிர்பார்த்தார். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், டிரம்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அமைதிக்கான பரிசை வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன்–ஜூலை … Read more