ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு – தலைநகரில் போராட்டம்

டெகுசிகல்பா, மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஹோண்டுராஸ். அந்த நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 30-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பல்வேறு கட்டங்களாக எண்ணப்படுகின்றன. அதன்படி, முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவு கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் ஹோண்டுராஸ் லிபரல் கட்சி வேட்பாளர் சால்வடோர் நஸ்ரல்லாவை விட 515 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய கட்சி வேட்பாளர் நஸ்ரி அஸ்புரா முன்னிலையில் உள்ளார். இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக லிபரல் கட்சி ஆதரவாளர்கள் … Read more

திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏன்? கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கருத்து

திருவனந்தபுரம், கேரளாவில் பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நடிகர் திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட திலீப் கருத்து தெரிவிக்கையில், ‘என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க, எனக்கு எதிராக கூட்டு சதி நடந்தது’ என்றார். இதுதொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்பிற்கு எதிரான சாட்சியங்களின் அடிப்படையில்தான் அவருக்கு எதிராக வழக்கு … Read more

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் ஜெர்மனி-ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை

சென்னை 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொள்கிறது. 7 முறை சாம்பியனான ஜெர்மனி அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்தையும், … Read more

சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்: கார் மீது மோதி விபத்து

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் நேற்று இரவு சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி பிரேவர்டு நகரின் நெடுஞ்சாலையில் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார். அப்போது, விமானம் சாலையில் சென்ற கார் மீது மோதியது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி சென்ற 57 வயது பெண் லேசான காயமடைந்தார். விமானத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. … Read more

இண்டிகோ விமான வழித்தட உரிமங்களை 10 சதவீதம் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி, இந்தியாவின் பொது விமானத்துறையான ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் விற்கப்பட்டது. மேலும் இந்தாண்டு ஜூனில் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏர் இந்தியா மீதான நம்பிக்கை பொதுமக்களிடம் சரிய தொடங்கியது. மறுபக்கம் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்தில் அசைக்க முடியாத பெரும்சக்தியாக உருப்பெற்றது. அந்த நிறுவனத்திடம் 134 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய அணி அபார வெற்றி

கட்டாக் , இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் (5 பந்துகள்) … Read more

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு: 6 வீரர்கள் பலி

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் தலீபான்கள் அதனை மறுத்து வருகின்றனர். இந்தநிலையில் கைபர் பக்துங்க்வா மாகாண சோதனைச்சாவடியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். 4 பேருக்கு படுகாயம் … Read more

அனில் அம்பானி மகன் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

புதுடெல்லி, இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான அனில் அம்பானி வசம் இருந்த ரிலையன்ஸ் குழுமம் சரிய தொடங்கியது. அனில் அம்பானிக்கு முன்னாள் இந்தி நடிகை டீனாவுடன் திருமணமாகி ஜெய் அன்மோல் (வயது 33) மற்றும் ஜெய் அன்சுல் (29) என இரு மகன்கள் உள்ளனர். இதில் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக ஜெய் அன்மோல் இருந்தார். இந்த நிறுவனத்துக்காக பல்வேறு இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து ரிலையன்ஸ் ஹோம் … Read more

இந்திய கிரிக்கெட்டில் முதல் வீரர்: வரலாற்று சாதனை படைத்த பும்ரா

புவனேஷ்வர், இந்தியா – தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். பும்ரா டெஸ்ட்டில் 234 விக்கெட்டுகள், … Read more

மாயமான மலேசிய விமானம்: பயணிகள் குடும்பத்திற்கு தலா ரூ.3½ கோடி இழப்பீடு; சீன கோர்ட்டு அதிரடி

கோலாலம்பூர், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு எம்.எச்-370 என்ற விமானம் புறப்பட்டது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 12 பணியாளர்கள் உள்பட 239 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. எனவே காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். எனினும் அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை கேள்விக்குறியாக உள்ளது. இதனால் 11 ஆண்டுகளுக்கு … Read more