தாய்லாந்து – கம்போடியா மோதலால் இடம்பெயரும் மக்கள்

கம்போடியா, தாய்லாந்து – கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்சினை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்த டிசம்பர் 7ம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் இரு … Read more

ஒடிசா: வேலை வாங்கித்தருவதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த நபரிடம் தனக்கு டேட்டா எண்டரி வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, வேலை குறித்து ஆலோசனை நடத்த தனது வீட்டிற்கு வருமாறு அந்த நபர் சிறுமியிடம் கூறியுள்ளார். இதை நம்பி கடந்த வியாழக்கிழமை மதியம் அந்த நபரின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அந்த நபர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது … Read more

மெஸ்ஸியின் இந்தியா சுற்றுப் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு

புதுடெல்லி, கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி, ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் 14 ஆண்டுக்கு பிறகு மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த 13-ந்தேதி இந்தியாவுக்கு வந்தார். முதலில் கொல்கத்தாவுக்கு சென்ற அவர் தனது 70 அடி உருவச்சிலையை திறந்து வைத்தார். ஆனால் அங்கு சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் வெறும் 15 நிமிடங்களில் வெளியேறியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஸ்டேடியத்தை சூறையாடினர். மெஸ்சியின் வருகையையொட்டி சால்ட்லேக் ஸ்டேடியத்தில் … Read more

‘இது இந்தியா அல்ல..’ நியூசிலாந்தில் சீக்கியர்களின் பேரணியை தடுத்து நிறுத்திய ‘தேசபக்தி’ அமைப்பினர்

வெல்லிங்டன், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ள கிரேட் சவுத் ரோடு பகுதியில் சீக்கியர்கள் சிலர் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது ‘நியூசிலாந்தின் உண்மையான தேசபக்தர்கள்’ எனப்படும் அமைப்பை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், சீக்கியர்களின் பேரணியை எதிர்கொண்டு தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் நியூசிலாந்தின் பழங்குடி மக்களான மாவோரி இனத்தவரின் பாரம்பரிய நடனமான ‘ஹக்கா’ நடனத்தை ஆடத் தொடங்கினர். அப்போது அவர்கள், ‘இது எங்கள் நாடு, இது எங்கள் நிலம், இது இந்தியா அல்ல, நியூசிலாந்து’ என்பன … Read more

‘யோகா, தியானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்’ – குஜராத் முதல்-மந்திரி பேச்சு

காந்திநகர், குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற யோகா பயிற்சியாளர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;- “பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட ‘விக்சித் பாரத்’(வளர்ந்த இந்தியா)- 2047 என்ற இலக்கை, தியானம் மற்றும் யோகா மூலம் கட்டமைக்கப்பட்ட ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கை முறை கொண்ட சமுதாயத்தால் மட்டுமே அடைய முடியும். யோகா உடல் வலிமையை வளர்க்கிறது. தியானம் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்துகிறது. தியானத்தின் மூலம் பெறப்படும் … Read more

முதல் டி20: இந்திய அணிக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

விசாகப்பட்டினம், இந்தியா வந்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி -இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி இலங்கை அணி ரன்கள் குவித்தது. பின்னர் இந்திய … Read more

நாடு தழுவிய போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதற்கிடையே நேற்று தோஷகானா கானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு … Read more

ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி, நாட்டின் கிராமப் பகுதிகளில் வறுமையை ஒழிக்கவும், வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ல் அமல் படுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் சோதனை ரீதியாக குறைவான மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், 2008ல் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகே இத்திட்டத்தின் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என பெயர் மாற்றப்பட்டது. இத்திட்டத்தின்படி, 100 நாட்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டு, ஊதியம் உள்ளிட்ட முழு செலவினங்களையும் மத்திய … Read more

முழு வீச்சில் தயாரான கில்…கடைசி நேரத்தில் வந்த அதிர்ச்சி

சென்னை, 20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து … Read more

விண்வெளிக்குச் சென்ற முதல் மாற்றுத்திறனாளி பெண்

லண்டன், ஆராய்ச்சிகளுக்காக மனிதர்கள் விண்வெளிக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாவிற்காகவும் விண்வெளிக்கு சென்று வருகின்றனர்.இந்தநிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது. இந்த பயணத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் விண்வெளிக்கு சென்று சாதனை படைத்துள்ளார். நேற்று விண்வெளிக்கு புறப்பட்ட ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில், ஜேர்மனியை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) பொறியாளரான மைக்கேலா பென்தாஸ்(Michaela Benthaus), பயணம் … Read more