விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

மும்பை, 33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன. அந்த வகையில் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஷர்துல் தாக்கூர் செயல்பட்டு வந்தார். ஆனால், பயிற்சியின்போது ஷர்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து நடப்பு விஜய் ஹசாரே … Read more

‘நான் எந்த தவறும் செய்யவில்லை’ – நியூயார்க் கோர்ட்டில் நிகோலஸ் மதுரோ வாதம்

வாஷிங்டன், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. … Read more

டெல்லியில் இன்று 46-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

புதுடெல்லி, தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த இரண்டு அமைப்புகளும் அவ்வப்போது கூடி பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கு 7.35 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அதிகாரிகள் கேட்டனர். மேலும் அங்கீகரிக்கப்படாத நீரேற்று திட்டங்களை … Read more

ஆஷஸ் கடைசி டெஸ்டில் சதமடித்த ரூட்: 2-ம் நாள் முடிவில் ஆஸி. அணி 166 ரன்கள் சேர்ப்பு

சிட்னி, ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. … Read more

அமெரிக்கா: ஜே.டி. வான்ஸ் வீடு மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

நியூயார்க், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் சின்சின்னாட்டி நகரில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடு மீது மர்ம நபர் ஒருவர் இன்று தாக்குதல் நடத்தி உள்ளார். அவர் சுத்தியலை கொண்டு தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின்போது, வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் தீவிர தேடுதலுக்கு பின்னர் … Read more

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை

புதுடெல்லி, எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது கிரோக் ஏ.ஐ. பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்துடன் இணைக்கப்பட்டு கிரோக் ஏ.ஐ. செயல்படுகிறது. எக்ஸ் தள பயனர்கள் சிலர் கிரோக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாக ஆபாசமாக மாற்றி வருகின்றனர். மேலும் அவற்றை எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரவே அது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது எக்ஸ் … Read more

விராட் கோலியின் சாதனை சமன்…39 வயதில் வரலாறு படைத்த டேவிட் வார்னர்

சென்னை, ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர்(39) , கடந்த 3-ம் தேதி பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தனது 9வது டி20 சதத்தைப் பதிவு செய்த அவர், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையைச் சமன் செய்தார். 65 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் குவித்த வார்னர், நடப்பு பிக் பாஷ் சீசனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு … Read more

ரஷிய எண்ணெய் விவகாரத்தில் உதவாவிட்டால்… இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். எனினும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நலன் கருதியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எந்த ஒரு வெளிப்புற அழுத்தத்திற்கும் பணிய மாட்டோம் என இந்தியா கூறி வருகிறது. ரஷியாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவுகின்றன என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், இந்தியாவுக்கு … Read more

வெனிசுலா அதிபரை டிரம்ப் கடத்தியதுபோல் மசூத் அசாரை இந்தியா கொண்டு வரவேண்டும்; ஒவைசி யோசனை

ஐதராபாத் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி. பிரதமர் மோடிக்கு ஒரு யோசனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெனிசுலாவுக்கு படைகளை அனுப்பி அந்நாட்டு அதிபரை கைது செய்து அமெரிக்காவுக்கு கொண்டு வந்துள்ளார். அதுபோல், பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்று, கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய சதிகாரர்களை பிடித்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். டிரம்பால் முடியும் என்னும்போது, பிரதமர் மோடியாலும் முடியும். மசூத் அசாரோ … Read more

டி20 உலகக்கோப்பை; வங்காளதேச அணி அறிவிப்பு

டாக்கா, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேச அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வங்காளதேச அணி : லிட்டன் தாஸ் (கேப்டன்), … Read more