ஆண்டர்சன் – தெண்டுல்கர் கோப்பை: அதிக ரன், விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 வீரர்கள்

லண்டன், இந்தியா-இங்கிலாந்து இடையே ‘ஆண்டர்சன் – தெண்டுல்கர்‘ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. … Read more

பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்விக்கு காரணம்; பிரதமர் மோடியிடம் பகுப்பாய்வுக்குழு அறிக்கை

சென்னை, இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மே மாதம் 18-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இ.ஓ.எஸ்.-09 செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஆனால், திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்த முடியாமல் இது தோல்வியில் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தோல்விக்கான காரணம் குறித்து பகுப்பாய்வுக்குழு அமைக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது. இதற்கிடையே தோல்விக்கான காரணத்தை இந்த குழு ஆய்வு செய்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில், ‘பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியின் குறைந்த ரன் வித்தியாச வெற்றி எது தெரியுமா..?

லண்டன், இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஹாரி புரூக் … Read more

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுற்றுலா பஸ் மீது ரெயில் மோதல் – ஒருவர் பலி, 11 பேர் படுகாயம்

மாஸ்கோ, ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பஸ் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது. இதனை பார்த்த ரெயில் டிரைவர் அவசர பிரேக்கை அழுத்தினார். ஆனால் அருகில் இருந்ததால் அந்த பஸ் மீது ரெயில் மோதியது. தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் பஸ்சுக்குள் இருந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த விபத்தில் உடல் நசுங்கி … Read more

இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியது உண்மை அல்ல – சசி தரூர்

மும்பை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த வாரம் இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதித்தார். மேலும் இந்திய பொருளாதாரத்தை ‘வீழ்ந்த பொருளாதாரம்’ என அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியது உண்மை அல்ல என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புனேயில் உள்ள கிராஸ்வேர்டு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியுடன் சசி தரூர் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- “ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் … Read more

தொடரை சமன் செய்த இந்தியா.. பாராட்டிய விராட் கோலி… சிராஜ் நெகிழ்ச்சி பதில்

லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்‘ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் … Read more

ஹாங்காங் அரசுக்கு எதிராக போராட்டம்: வெளிநாட்டைச் சேர்ந்த 16 தன்னார்வலர்களின் பாஸ்போர்ட் ரத்து

பீஜிங், தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உதவி செய்வதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. எனவே வெளிநாட்டைச் சேர்ந்த 16 தன்னார்வலர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு ஹாங்காங்கில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 1 … Read more

மின்சார ரெயில்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 'கவாச்' கருவி – மேற்கு ரெயில்வே தகவல்

மும்பை, ரெயில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ‘கவாச்’ கருவி பொருத்தப்படுகிறது. ‘கவாச்’ கருவி என்பது ரெயில்களில் பாதுகாப்பு அம்சத்தை திறன்பட மேற்கொள்ள இந்திய ரெயில்வேயால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கருவியாகும். தானியங்கி கருவியான ‘கவாச்’ இந்திய ரெயில்களில் ஏற்படும் விபத்துகளை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் திறன் கொண்டது. தற்போது இந்த தொழில்நுட்பம் பெரும்பாலும் நீண்ட தூர ரெயில்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ‘கவாச்’ … Read more

ஆஸ்திரேலிய தொடர்: இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

புதுடெல்லி, இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 24 வீரர்கள் கொண்ட இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நீடிக்கிறார். தமிழக வீரர் செல்வம் கார்த்தி அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணி விவரம் பின்வருமாறு:- கோல்கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், சுரஜ் … Read more

இங்கிலாந்தில் மீட்பு பணிக்காக ஆளில்லா போலீஸ் ஹெலிகாப்டர் அறிமுகம்

லண்டன், இங்கிலாந்து கடற்படையில் முதன்முறையாக ஆளில்லா போலீஸ் ஹெலிகாப்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. கடல் மற்றும் வனப்பகுதியில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்த ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட உள்ளது. இது சுமார் 12 மணி நேரம் வரை தொடர்ந்து வானில் பறக்கும். தற்போது மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை மட்டுமே பறக்கும். எனவே காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்த ஆளில்லா ஹெலிகாப்டர்கள் … Read more