ஆஷஸ் 5வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு … Read more

ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி?

மாஸ்கோ, ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷிய வான் பாதுகாப்பு படை அழித்ததாகவும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ சேதமோ ஏறபடவில்லை என்றும் இந்த சம்பவத்தால் பேச்சுவார்த்தை நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் வீடு மீது டிரோன் தாக்குதல் … Read more

மராட்டிய மாநகராட்சி தேர்தல்: மீண்டும் கைகோர்த்த சரத்பவார் – அஜித் பவார்

புனே மராட்டிய மாநிலத்தில் அரசியல் களம் அடிக்கடி மாறி வருகிறது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி–சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜ.க., ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.இதற்கிடையே, சரத்பவாரும் அஜித் பவாரும் … Read more

மீண்டும் களத்திற்கு திரும்பும் ஷ்ரேயாஸ் அய்யர்

புதுடெல்லி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். ‘ஸ்கேன்’ பரிசோதனை மேற்கொண்ட போது, விலா எலும்பையும் … Read more

இந்தோனேசியா: முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 16 பேர் பலி

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுலாவாசி மாகாணம் மனடொ பகுதியில் முதியோர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் 30க்கும் மேற்பட்ட முதியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், இந்த முதியோர் இல்லத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 16 முதியவர்கள் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த தீ … Read more

ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் ; அசாமில் அமித்ஷா பேச்சு

கவுகாத்தி, அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா செயல்பட்டு வருகிறார். அசாமிற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திடப்பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அமித்ஷா கூறுகையில், வங்காளதேசத்தை … Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின்

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் ராஜகோபால் (வயது 57) த/பெ.அய்யாக்கண்ணு என்பவர் நேற்று (28.12.2025) காலை சுமார் 9.00 மணியளவில் தனக்குச் சொந்தமான கிணற்றில் உள்ள விவசாய மின்மோட்டாரினை விவசாயத்திற்காக இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் … Read more

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

திஸ்பூர், அசாமின் மோரிகான் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 3.49 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 50 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.43 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.34 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. அசாமில் அடிக்கடி நிலநடுக்கங்கள் … Read more

கட்சி கட்டமைப்பு: திக்விஜய் சிங் கருத்துக்கு சசிதரூர் எம்.பி. ஆதரவு

புதுடெல்லி, டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்ததுடன் மூத்த தலைவர்களின் காலடியில் அமர்ந்த ஒரு அடிமட்டத் தொண்டர் எப்படி முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் உயர்ந்தார் என்று கூறி, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜனதாவின் அமைப்பு பலத்தைப் பாராட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறவும், அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றவும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை அடிமட்ட … Read more

4வது டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க … Read more