“சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட காலம்.. முதல் வேலை, முதல் சம்பளம்”: எஸ்ஜே சூர்யாவின் அந்தநாள் நியாபகம்
சென்னை: தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் எஸ்ஜே சூர்யா. சிம்புவுடன் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் எஸ்ஜே சூர்யாவுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் எஸ்ஜே சூர்யா, தனது ஆரம்பகால நினைவுகளை கண்கலங்க பேசியுள்ளார். இயக்குநராக அறிமுகம் நெல்லை அடுத்த வாசுதேவநல்லூரைச் சேர்ந்த எஸ்ஜே சூர்யா, சென்னை லயோலா கல்லூரியில் தான் பட்டப்படிப்பை முடித்தார். ஆரம்பத்தில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்ததாம். … Read more