பாங்காக்கில் குட்டி டவுசரில் குத்தாட்டம் போட்ட ரேஷ்மா.. த்ரோபேக் வீடியோ போட்டு ஓவர் ஃபீலிங்!

சென்னை: சினிமா, சின்னத்திரை மற்றும் வெப்சீரிஸ் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா படத்தில் புஷ்பா புருஷன் காமெடியின் டிரெண்டான ரேஷ்மா, விமலின் விலங்கு வெப்சீரிஸில் கிச்சாவை பால் வாங்க அனுப்பியே ஃபேமஸ் ஆகி விட்டார்.

பாக்கிய லட்சுமி சீரியலில் கோபிக்கும் இவருக்கும் இடையேயான உறவு வேறலெவலில் ரசிகர்களை அந்த சீரியலை பார்க்க வைத்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஹாட்னஸ்

சின்னத்திரை சீரியல்களில் சேலை கட்டி ஹோம்லி கேர்ளாக வரும் ரேஷ்மா பசுபுலேட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு சென்று பார்த்தால், இந்த வயதிலும் எந்தளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு போஸ் கொடுத்து 1.1 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி உள்ளார்.

பாங்காக்கில் குத்தாட்டம்

பாங்காக்கில் குத்தாட்டம்

குட்டி டவுசர் அணிந்து கொண்டு கோடை விடுமுறையின் போது பாங்காக் சென்று குத்தாட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. மஞ்சள் கலர் டாப்ஸ் மற்றும் நீல நிற டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஆங்கில பாடலுக்கு தொடை தெரிய பீச் அருகே குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த ஃபீலிங்

அந்த ஃபீலிங்

பாங்காக்கில் உள்ள பட்டாயா பீச்சில் கவர்ச்சி நடனம் போட்டுள்ள ரேஷ்மா பசுபுலேட்டி, மீண்டும் அங்கே செல்ல வேண்டும் என தனது ஃபீலிங்கை ஓவர் லோடாக கேப்ஷனில் கொட்டித் தீர்த்துள்ளார். அதை பார்த்து விட்டு நெட்டிசன்கள் தப்பாக கமெண்ட் போட்டு கலாய்க்கக் கூடாது என்பதற்காக உஷாராக கமெண்ட்ஸ் பாக்ஸை ஆஃப் செய்து வைத்து விட்டார்.

லைக் போட்ட பிக் பாஸ் பிரபலம்

லைக் போட்ட பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான நடிகை ரேஷ்மா அவர் பதிவிட்டுள்ள இந்த கிளாமர் டான்ஸ் வீடியோவுக்கு சக பிக் பாஸ் போட்டியாளரான நடிகை ஷெரின் லைக் போட்டுள்ளார். ஏகப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் ரேஷ்மா பசுபுலேட்டியின் நடனத்தை ரசித்து லைக் போட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.