ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் சரண்: ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்

லதேகர்: மாவோயிஸ்ட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தேடுல் வேட்டைகள் நடத்தப்படும் அதே நேரத்தில், சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளும் அளிக்கப்படுகின்றன. இதனால் சரணடையும் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகர் மாவட்டத்தில் போலீஸார் முன்னிலையில், 2 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் ஜி என்ற பிரஜேஷ் யாதவ். இவர் மாவோயிஸ்ட் அமைப்பில் துணை மண்டல கமாண்டராக இருந்தார். இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு … Read more

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை … Read more

டெல்லியில் வெடித்த காரை மருத்துவர் உமர் ஓட்டிச் சென்றது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி!

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் வெடித்த ஐ20 காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் நபியின் டிஎன்ஏ மாதிரிகள், அவரது தாயாரின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்கச் செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், காரில் குண்டை வெடிக்கச் … Read more

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலை வழக்கில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த … Read more

வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது

புதுடெல்லி: ஜேபி இன்ஃபராடெக் லிட். எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் கவுரை, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. டெல்லி அருகேயுள்ள நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2007 முதல் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜேபி இன்ஃபராடெக் லிட். குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களைக் கட்டும் இந்நிறுவனம், நொய்டாவில் இருந்து ஆக்ரா வரையிலான 165 கிலோ மீட்டர் தொலைவுள்ள ஆறு வழி எக்ஸ்பிரஸ் வழித்தட பரமாரிப்பையும் … Read more

“சினிமாவில் வன்முறை, சாதியை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும்” – அண்ணாமலை

கோவை: “திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது” என்று பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அறிமுகக் கூட்டம், கோவை சின்னியம் பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (நவ.13) நடந்தது. இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் … Read more

“ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல” – உமர் அப்துல்லா கருத்து

ஜம்மு: ‘ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல. ஒரு சிலர் மட்டுமே அமைதியைக் கெடுக்கிறார்கள்’ என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்த முதல்வர் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த மதமும் இவ்வளவு கொடூரமாக அப்பாவிகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடரும். ஆனால் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், … Read more

10 ஏக்கர் குறுவை நெற்பயிரை காப்பாற்ற 5 ஏக்கர் நெற்பயிரை அழித்த கும்பகோணம் விவசாயி!

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பேட்டை வடக்குத் தெருவில் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிரை காப்பாற்ற 5 ஏக்கர் நெற்பயிரை விவசாயி ஒருவர் அழித்துள்ளார். பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ராஜன் (50). விவசாயியான இவர் 15 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், இவர் கடந்த ஜூன் மாதம் இறுதியில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக நடவு பணியை மேற்கொண்டார். தொடர்ந்து கதிர் விடும் பருவத்தில் கடந்த ஆக.19-ம் தேதி பெய்த … Read more

டெல்லி சம்பவத்துக்குப் பின் அதிகம் கவனிக்கப்படும் அல் பலா பல்கலை.யின் நிறுவனர் பின்புலம் என்ன?

புதுடெல்லி: அல் பலா பல்கலைக்கழக நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான ஜாவெத் அகமது சித்திக்கி, ரூ.7.5 கோடி மோசடி வழக்கில் கடந்த 2001-ல் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் முகமது நபி, அல் பலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் என்பதும், இதே மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்களாக பணியாற்றிய மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதும் … Read more

ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு: காலை 6.30 மணி முதல் மாலை 5 வரை இனி செயல்படும்

புதுச்சேரி: ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நோயாளிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிப்மருக்கு சிகிச்சைக்காக புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். ஜிப்மரில் புறநோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பொது மருத்துவப் பிரிவில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை மையம் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கியில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றின் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் காலை 06:30 மணி முதல் மாலை … Read more