‘உளவியல் தாக்கத்தை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியீடு’ – தேஜஸ்வி யாதவ்
பாட்னா: பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். ‘தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்று அவர் கூறினார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், “எங்களுக்குக் கிடைக்கும் கருத்துக்களின்படி பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பதற்றமாகவும் அச்சத்தோடும் இருப்பது தெரிகிறது. அவர்கள் அமைதியற்று இருக்கின்றனர். … Read more