மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு

சென்னை: நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வேற்​காடு, வீரராகவ புரத்​தில் செயல்​பட்டு வரும் அரசு ஆரம்​பச் சுகா​தார நிலை​யத்​துக்கு ஒவ்​வொரு வாரம் செவ்​வாய்க்​கிழமை​களில் 300-க்​கும் மேற்​பட்ட கர்ப்பிணி பெண்​களும், மற்ற நாட்​களில் 200-க்​கும் மேற்​பட்​டோரும் மருத்​துவ சிகிச்​சைக்​காக வந்து செல்​கின்​றனர். இந்த மருத்​து​வ​மனை ஆவடி – பூந்​தமல்லி நெடுஞ்​சாலை​யில் அமைந்​திருப்​ப​தால், திரு​வேற்​காடு நகராட்சி மக்​கள் மட்​டுமின்றி சுற்று​வட்​டாரத்​தில் உள்ள மேல்​பாக்​கம், கண்​ணப்​பாளை​யம் உள்​ளிட்ட பகுதி மக்​களும் எளி​தாக வந்து மருத்​து​வம் பெற … Read more

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்: நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்றது கவனம் பெற்றது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினமா செய்தார். இதை அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாராஷ்டிர ஆளுநராக … Read more

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: காரணம் என்ன?

பிரேசிலியா: பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற சதி செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெய்ர் போல்சனாரோ கடந்த 2019 முதல் 2022 வரை அந்நாட்டின் அதிபராக இருந்தார். வலதுசாரி கட்சித் தலைவரான இவர், 2022-ல் நடந்த அதிபர் தேர்தலில் தொழிலாளர் … Read more

திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருநாட்டியாத்தங்குடி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மாங்கனி(39). இவர், தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் செப்.9-ம் தேதி குளிக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்- சத்தியகலா தம்பதியரின் மகன் ஹேம்சரண்(10), பெரும்புகலூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கவியரசன்(11) ஆகியோரும் அங்கு குளிக்க வந்துள்ளனர். இந்நிலையில், ஆற்றின் கீழ் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்த கவியரசன் திடீரென கால் வழுக்கி ஆற்றுக்குள் விழுந்தார். அப்போது, … Read more

தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஹைத​ரா​பாத் போன்ற நகரங்​களில் தொடர் மழை​யால் மக்​களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. சாலைகளில் மழை நீர் ஆங்​காங்கே தேங்​கிய​தில் முக்​கிய சாலைகள் உட்பட பல இடங்​களில் வெள்​ளம் போல் காட்​சி​யளிக்​கிறது. இதனால் வாகன ஓட்​டிகள் மிக​வும் அவதிக்​குள்​ளாகி உள்​ளனர். விஜய​வாடா – ஹைத​ரா​பாத் தேசிய நெடுஞ்​சாலை​யில் மழை … Read more

நேபாள கலவரத்தை பயன்படுத்தி நிழல் உலக தாதா உதய் சேத்தி தப்பியோட்டம்: மேலும் 15,000 கைதிகள் மாயம்!

புதுடெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட கலவரத்தைப் பயன்படுத்தி அங்குள்ள சிறைகளிலிருந்து சுமார் 15,000 கைதிகள் தப்பி உள்ளனர். இவர்களில் 32 வருடம் தண்டனை பெற்ற கைதியான நிழல் உலக தாதா உதய் சேத்தியும் மாயமாகி உள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் அந்நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது. பொது மக்களுக்கும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்தச் சூழலில் போராட்டக்காரர்களால் பல சிறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி நேபாளின் 20-க்கும் மேற்பட்ட சிறைகளிலிருந்து சுமார் 15,000 கைதிகள் தப்பி … Read more

ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்

ஓசூர்: ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடந்த நான்கரை ஆண்டுகளில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை சார்பில், முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு … Read more

புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

பெங்களூரு: கர்​நாட​கா​வில் உள்ள பந்​திப்​பூர் அரு​கே​யுள்ள வனப்​பகு​தி​யில் புலியை பிடிக்​காமல் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக, வனத்​துறை​யினர் 7 பேரை கூண்​டில் அடைத்து கிராம மக்​கள் எதிர்ப்பை வெளிப்​படுத்​தினர். கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ்நகர் மாவட்​டத்​தில் பந்​திப்​பூர் தேசிய வனவிலங்கு காப்​பகம் அமைந்​துள்​ளது. இந்த காப்​பகத்தை சுற்​றி​யுள்ள கிராமங்​களில் கடந்த 6 மாதங்​களில் 20க்​கும் மேற்​பட்ட ஆடு, மாடு​களை புலி, சிறுத்​தைகள் பிடித்து தின்​ற​தால் கோபம் அடைந்​தனர். அதேவேளை​யில் புலிகளை பிடிக்​காமல் வனத் துறை​யினர் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் நேற்று … Read more

16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

விழுப்புரம்: பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தன் (காந்தியின் மகன்) நியமிக்கப்படுவதாக நிறுவனர் ராமதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் அறிவித்தார். இதற்கு, மேடையிலேயே கட்சித் தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு … Read more

இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இண்டியா கூட்டணியில் உள்ள 315 எம்.பி.க்களும் இந்த தேர்தலில் வாக்களித்தனர். ஆனால் இந்த அணியில் உள்ள 15 எம்.பி.க்கள், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்ததால் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு என்பதால், யார் அணி மாறி … Read more