திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம்

திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை விமான நிலையம் முதலே தொடரத் தொடங்கினர். காவல்துறை நிபந்தனைகளை எல்லாம் மீறி தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து செல்கிறது. காலை 10.35 மணிக்கு விஜய் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை … Read more

‘நேபாள அமைதிக்கு இந்தியா உறுதுணை’ – சுசீலாவை வாழ்த்திய பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “நேபாளத்தில் அமைதி திரும்புவதில், வளம், வளர்ச்சியை உறுதி செய்வதிலும் உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டது. இந்த சூழலில் … Read more

‘ஊழலை ஒழியுங்கள்’ – இடைக்கால பிரதமர் சுசீலா கார்கிக்கு நேபாள மக்கள் கோரிக்கை

காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அசாதாரண சூழல் நிலவும் வேளையில் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழலில் ஊழலை ஒழிக்க வேண்டுமென அவரிடம் நேபாள மக்கள் கோரியுள்ளனர். நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, பிரதமராக பொறுப்பேற்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினர் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை அன்று … Read more

விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம் 

புதுடெல்லி: தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக்​ கூறி பாலியல் ரீதி​யாக ஏமாற்​றி​விட்​ட​தாக நடிகரும், நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சீமான் மீது நடிகை விஜயலட்​சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசர​வாக்​கம் காவல் நிலை​யத்​தில் பாலியல் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் சீமான் மீது பாலியல் துன்​புறுத்​தல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்​குப் பதிவு செய்​திருந்​தனர். இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி சீமான் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற … Read more

நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்: பிரதமர், அமைச்சர்கள் வாழ்த்து 

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களித்தனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் … Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 … Read more

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

புதுடெல்லி: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, பிரதமர் மோடி இன்று செல்கிறார். அங்கு ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி – மைத்தேயி மக்கள் இடையே கடந்த 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. இம்பால் போன்ற சமதளப் பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியின … Read more

நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்? – 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை

காத்மாண்டு: நே​பாளத்​தின் புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்​பாக சுமார் 12-க்​கும் மேற்​பட்ட போராட்​டக் குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். நேபாளத்தில் அண்​மை​யில் “நெப்போ பேபி” என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது அந்நாட்டு அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர். இதன் எதிர்​விளை​வாக பேஸ்​புக், யூ டியூப் உள்​ளிட்ட 26 … Read more

பொதுக்கூட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த டிஜிபி சுற்றறிக்கை!

மதுரை: பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என காவல் ஆணையர்கள், கண்காணிப் பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அன்று வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தபோது நோயாளி சந்திராவை அழைத்துக்கொண்டு கூட்டம் … Read more

பட்டாசுக்கான தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்க கூடாது? – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி 

புதுடெல்லி: பட்டாசுக்கு டெல்லியில் விதிக்கப்பட்டதடையை ஏன் நாடு முழுவதும் நீட்டிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ‘பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப் பொருட்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடல்நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்’ என்று கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. … Read more