போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழப்பு

காத்மண்டு: நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார். நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் … Read more

“சனிக்கிழமைகளில் மட்டுமே மக்களை பார்ப்பேன் என்பது…” – விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்

சென்னை: “தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும்தான் மக்களை பார்ப்பேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. 24 மணி நேரமும் களத்தில் நிற்க வேண்டும்” என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். டிடிவி தினகரன் ஒரு நல்ல தலைவர். எங்களை வழி நடத்தி கொண்டிருப்பவர் நயினார் நாகேந்திரன். எங்கேயும் கருத்து … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை வசப்படுத்தினார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல், நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் F-101, வசுதா, முதல் மாடி என்ற முகவரியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். 10 மணிக்கு … Read more

ரஷ்யாவில் மனிதர்​களிடம் நடத்​தப்​பட்ட புற்றுநோய் தடுப்பூசி சோதனை வெற்றி

மாஸ்கோ: புற்​று​நோய்க்கு தடுப்​பூசி உரு​வாக்​கும் பணி​யில் ரஷ்​யா​வின் தேசிய கதிரியக்க மருத்​துவ ஆராய்ச்சி மைய​மும் ஏங்​கல்​ஹார்ட் மூலக்​கூறு உயி​ரியல் நிறு​வன​மும் இணைந்து செயல்​பட்டு வந்​தன. பல ஆண்டு கால முயற்​சி​யின் பலனாக புற்​று​நோய்க்கு என்ட்​ரோமிக்ஸ் என்ற தடுப்​பூசியை உரு​வாக்​கி​யுள்​ள​தாக அவை அறி​வித்​தன. கரோனா தடுப்​பூசிகளைப் போலவே அதே எம்​-ஆர்​என்ஏ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி இது உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. புற்​று​நோய் செல்​களை நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்​டலம் அடை​யாளம் கண்டு அகற்​றும் வகை​யில் இது வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. கீமோதெரபி, கதிர்​வீச்சு போன்ற … Read more

“திமுக தூண்டுதலில் தான் எல்லா வேலைகளும் நடக்கிறது” – நயினார் நாகேந்திரன் காட்டம்

தூத்துக்குடி: “தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசியல் விவகாரங்களின் பின்னணியில் திமுகதான் உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “செங்கோட்டையன் டெல்லிக்கு சென்றது குறித்து நான் எப்படி பதில் சொல்ல முடியும்? ராமர் கோயில், ரிஷிகேஷ் போவதாக கூறினார். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் போது 90 முறை மாநில அரசுகளை கலைத்துள்ளனர். அது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். எங்கள் கட்சி வழக்கம் அது … Read more

“சிறையில் வாழ முடியவில்லை… எனக்கு விஷம் கொடுங்கள்!” – நீதிபதியிடம் நடிகர் தர்ஷன் முறையீடு

பெங்களூரு: ‘பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் என்னால் உயிர் வாழ முடியாது. தயவுசெய்து எனக்கு விஷமாவது கொடுங்கள்” என்று சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் இன்று நீதிபதியிடம் முறையிட்டார். பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். … Read more

நேபாளத்தில் 2வது நாளாக நீடிக்கும் போராட்டம் – இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை

புதுடெல்லி: நேபாளத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகள் வெளியிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். நேபாளத்தில் போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், “நேபாளத்தில் நேற்று … Read more

திருப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முன்னேற்பாடுகள் இல்லாததால் நெரிசல் – பொதுமக்கள் அவதி

திருப்பூர்: திருப்பூர் நல்லூர் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடந்தது. அதில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ 2-ம் கட்ட முகாம், பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. திருப்பூர் மாநகரில் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 46, 47 மற்றும் 48-வது வார்டுகளுக்கு, திருப்பூர் கூலிபாளையம் சாலை ஆர்.கே.ஜி. மண்டபத்தில் இன்று (செப்.9) நடைபெற்றது. இதில் அளவுக்கதிகமான பொதுமக்கள் திரண்டதால் கடும் நெரிசல் மற்றும் லேசான தள்ளு முள்ளு … Read more

“ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக வருவார்” – டி.கே.சிவகுமார் நம்பிக்கை

பெங்களூரு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2029-ஆம் ஆண்டு பிரதமராவார் என்றும், நாடு ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “2029-ஆம் ஆண்டு ராகுல் காந்தி இந்த நாட்டின் அடுத்த பிரதமராக வருவார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவை. இந்த நாட்டை சுற்றிலும் நமக்கு எந்த நண்பர்களும் இல்லை” என்றார். … Read more

நேபாள பிரதமரின் ராஜினாமா ஏற்பு – போராடும் இளைஞர்களின் கோரிக்கை என்ன?

காத்மாண்டு: இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினமா செய்வதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி அறிவித்த நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ராமச்சந்திர பவுடல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் … Read more