ஹரியாணா எம்எல்ஏ.வை நீக்கியது காங்கிரஸ்

புதுடெல்லி: ஹரியானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாய். மாநிலங்களவை தேர்தலில் இவர், கட்சி மாறி, பாஜக ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்திகேயா சர்மா என்பவருக்கு வாக்களித்தார். இதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன் தோல்வியடைந்தார். இதனால் குல்தீப் பிஷ்னாயை, அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். குல்தீப் பிஷ்னாயின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யும்படியும், … Read more

இந்தியாவில் ஆன்மிக வளர்ச்சியும் அவசியம் – ‘ஹரிவராசனம்’ நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு ஆளுநர் ரவி கருத்து

சென்னை: வேற்றுமையில் ஒற்றுமை என நமது இந்திய அரசியலமைப்பு வலியுறுத்துவதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதார வளர்ச்சிபோல, ஆன்மிகத்தின் வளர்ச்சியும் அவசியம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை சாத்தும்போது பாடப்படும் பிரசித்தி பெற்ற ‘ஹரிவராசனம்’ பாடல் இயற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா குழு அறிவிப்பு கூட்டம் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஹரிவராசனம் … Read more

சோனியாவுக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் வாங்கியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உட்பட பலர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி கடந்த 2-ம் தேதியும், சோனியா காந்தி கடந்த 8-ம் தேதியும் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் கோரிக்கையை ஏற்று, நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாவும் அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து … Read more

ரேஷன் ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்வு குறித்து பரிசீலனை – ஒரு வாரத்தில் நல்ல முடிவு என அமைச்சர் பெரியசாமி தகவல்

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டி.ஏ) உயர்வு வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 33,174 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1.99 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். இந்த ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் என 24 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்ததுபோல, இந்த ஆண்டு ஜனவரி முதல் 14 … Read more

நூபுர் சர்மா சர்ச்சை கருத்தை கண்டித்து போராட்டங்கள்: போலீஸார் கவச உடையில் செல்ல உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: சர்ச்சை கருத்து தொடர்பாக நடைபெறும் போராட்டங்களின் போது போலீஸார் கவச உடையில் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் முகமது நபி பற்றி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் முஸ்லிம்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். நூபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேற்கு வங்கம் மற்றும் … Read more

ஆன்லைன் சூதாட்டம் | அவசர சட்டம் இயற்ற பழனிசாமி வலியுறுத்தல் – ஆய்வுக் குழு அமைத்ததற்கு விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், ஆன்லைன் சூதாட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்திருப்பதை தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தின் தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ஆன்லைன் சூதாட்டத்தால் … Read more

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் எண்ணிக்கை அதிகரிப்பு: சிபிடிடி தலைவர் தகவல்

புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் (சிபிடிடி) சங்கீதா சிங் தெரிவித்துள்ளார். ரிட்டர்ன் தாக்கல் செய்வது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த நிதி ஆண்டில் ரிட்டர்ன் தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 7.14 கோடி. அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 6.9 கோடியாக இருந்தது. பொதுவாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் பெறும் போது வரி செலுத்துவோரின் விகிதம் … Read more

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க மாட்டு வண்டிகளில் வந்த கிராம மக்கள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க, தோகைமலை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்தனர். கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த காரணாம்பட்டி, காவல்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு மாட்டு வண்டிகளில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி ரங்கநாதரை தரிசிப்பது வழக்கம். அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு கோயிலுக்கு வந்தனர். இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டுக்குப் பதிலாக, நேற்றுமுன்தினம் 100-க்கும் மேற்பட்ட மாட்டு … Read more

உடல் எடையை 1 கிலோ குறைத்தால் ரூ.1,000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி – பாஜக எம்.பி.க்கு மத்திய அமைச்சர் கட்கரி அறிவுரை

போபால்: மத்திய பிரதேச மாநிலம் மால்வா பகுதியில் ரூ.5,772 கோடி மதிப்பிலான 11 சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். அப்போது, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பாஜக உறுப்பினர் அனில் பிரோஜியாவிடம், உடல் எடையை குறைத்தால், ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என நிதின் கட்கரி நகைச்சுவையாக கூறியதாக … Read more

குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது சமூக குற்றம் – குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதல்வர் கருத்து

சென்னை: சொற்பத் தொகைக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தீவிர சமூக குற்றம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பட்டாம்பூச்சிகள்போல சிறகடித்துப் பறந்து மகிழும் குழந்தைப் பருவத்தில், பள்ளிக்குச் சென்று துள்ளி விளையாடவும், கல்வி பயிலவும், உடன் பயிலும் மாணவர்களோடு கதை பேசிக்களிக்கவும் முடிந்தால்தான் குழந்தைப் பருவம் முற்றுப்பெறும். குழந்தைகளுக்கு அநீதி குழந்தைப் பருவத்திலேயே அவர்களை வேலைக்கு … Read more