ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடைச் சட்டம்; பாமக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை விதிக்கும் அவசரச் சட்டம் வரவேற்கத்தக்கது, பாட்டாளி மக்கள் கட்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். தமிழகத்தில் … Read more

நீர்வழித்தட கொசுப்புழு ஒழிப்புக்காக 6 ட்ரோன்கள் அறிமுகம்: பயிற்சி பெற்ற திருநங்கைகள் மூலம் இயக்க சென்னை மாநகராட்சி

சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழித் தடங்களில் உருவாகும் கொசுப் புழுக்களை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் 6 ட்ரோன்களை வாங்குகிறது. இவற்றை பயிற்சி பெற்ற திருநங்கைகள் மூலமாக இயக்க முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் கூவம், அடையாறு ஆகிய ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய முக்கிய நீர்வழித்தடங்களும் உள்ளன. இவற்றில் கூவம் ஆற்றுடன் 8 கால்வாய்கள், அடையாற்றுடன் 23 கால்வாய்கள், பக்கிங்ஹாம் கால்வாயுடன் 21 கால்வாய்கள் என மொத்தம் 52 இணைப்புப் … Read more

"ஏழைகளுக்கு 100% அதிகாரம் அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது" – பிரதமர் புகழாரம்

காந்திநகர்: முந்தைய தலைமுறையினர் எதிர்கொண்ட பிரச்சினைகளை இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம் நவ்ராசியில் உள்ள பழங்குடியினர் பகுதியான குட்வேலில் நடைபெற்ற ‘குஜராத் பெருமை இயக்கம்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பங்கேற்றார். அப்போது அவர், 7 புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 14 திட்டங்களுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் … Read more

ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கோயில் கும்பாபிஷேகம்: உசிலம்பட்டி அருகே பக்தர்கள் பரவசம்

மதுரை: உசிலம்பட்டி அருகே ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கோயில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராமத்தில் உள்ள அங்காளஈஸ்வரி கோயில் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோயிலை புனரமைப்பு செய்து, 101 அடி கோபுரம் கட்டப்பட்டு கோயிலின் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் செய்து 101 அடி கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித … Read more

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். கோவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த அரசு விழாவில் பங்கேற்ற தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: ”கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள மக்கள் பணி சார்ந்த குறைகளை தீர்ப்பதற்காக, தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, 24 மணி நேரமும் 7 நாட்களும் என்ற திட்டத்தின் கீழ், 94898 72345 … Read more

வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்

சென்னை: புதிய சொத்துவரி தொடர்பான நோட்டீசை திங்கள்கிழமை முதல் வீடு வீடாக சென்று அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தன. சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்றது. இதன்படி சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் இந்த … Read more

கோழிப்பணைகளை நடத்த இசைவு ஆணை பெறவேண்டும்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: தமிழகத்தில் கோழிப்பணைகளை நடத்த இசைவு ஆணை பெறவேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த ஜனவரி மாதம் ‘கோழிப் பண்ணைகளுக்கான சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களை’ வெளியிட்டது. இவ்வழிகாட்டுதல்கள் அனைத்து வகையான கோழிப்பண்ணைகளுக்கும் பொருந்தும். இதன்படி, ஒரே இடத்தில் 25,000 பறவைகளுக்கு மேல் வளர்க்கும் கோழிப்பண்ணைகள் நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கீழ் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் … Read more

வண்டலூரில் மனிதக் குரங்கிற்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

தாம்பரம்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது தாம்பரம் அடுத்த வண்டலுார் உயிரியல் பூங்காவில் 2,300-க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மூன்று மாவட்ட மக்களுக்கும் பிரதான சுற்றுலா தலமாக இது செயல்பட்டு வருகிறது. இப்பூங்காவில் கோம்பி (29) என்ற ஆண் மனித குரங்கும், கவுரி (23) என்ற பெண் மனித குரங்கும் உள்ளன. 16 ஆண்டுகளுக்கு முன்பு குட்டி ஈன்ற இந்தக் குரங்குகள் அதன்பின் குட்டி … Read more

“வல்லமை மிக்க திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

சென்னை: “அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பண்ணையை இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் பார்வையிட்டார்.அவரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி வரவேற்றார். Source … Read more

சமூக வலைதளம், இ-மெயில் மூலம் குறைகளுக்கு தீர்வு: சிஎம்டிஏ அறிவிப்பு

சென்னை: சமூக வலைதளம், இ-மெயில் மூலமாக குறைகளுக்குத் தீர்வு காணும் முறையை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில், ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை, நிலவகை மாற்றம் உள்ளிட்ட கட்டடம் கட்டுவது தொடர்பான பல்வேறு சேவைகளை சிஎம்டிஏ வழங்கி வருகிறது. Source link